Sunday, February 15, 2009

நெஞ்சம் மறப்பதில்லை...

உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடி உள்ளது. இந்தியாவில் தான் எத்தனை எதிர்ப்புகள். எத்தனை போராட்டங்கள். இவர்கள் எதோ மிருகங்களை போலவும் காட்டு மிராண்டிகளை போலவும் நடந்து கொள்வது எவ்வளவு கீழ்த்தரமானது. இவர்கள் வாழ்கையில் காதலித்ததே இல்லையா. இவர்கள் தம் மனைவிமார்களை காதலிப்பது இல்லையா? அப்படியென்றால் அவர்களை கொத்தடிமைகளாய் நடத்துகிறார்கள் என்று தானே அர்தம். இவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எந்த தவறும் இல்லை.

காதல் - இது வார்த்தைகளால் சொல்ல இயலாத ஒன்று. இது உணர்வுகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். காதலிப்பதும் காதலிக்கபடுவதும் எத்தனை மேலானது என்பது இந்த காட்டுமிராண்டிகளுக்கு எப்படி தெரியும்? நீங்கள் காதலிக்கீறீர்கள் என்றால் நீங்கள் மனிதர்கள். காதலிகாபடுபவர்கள் புண்ணியவான்கள். அதிர்ஷ்டகாரர்கள். ஆம். நீங்கள் காதலிக்கபடுகீறீர்கள் என்றால் உங்களின் மீது ஒருவர் அக்கறை செலுத்துகிறார் என்று அர்த்தம். உங்கள் மீது அன்பு செலுத்தப்படுகிறது என்று அர்த்தம். காதலை எதிர்க்கும் மூடர்களே சற்றே சிந்தித்து பாருங்கள்.

இன்று இதை எதிர்க்கும் இந்து அமைப்புகளே நீங்கள் காதலை எதிர்கீறீர்கள் என்றால் உங்கள் கடவுளான கண்ணனை எதிர்கீறீர்கள். உங்களுக்கு கீதையை வழங்கிய கிருஷ்ண பரமாத்மாவை கலங்க படுத்துகீறீர்கள். கிருஷ்ணன் புரியாத காதல் லீலையா? எந்த மதமும் காதலை, அன்பை, நேசத்தை பறை சாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

காதலை எதிர்பவர்கள் காட்டுமிராண்டிகள். காதல் ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கிறது.

அன்பு இல்லையென்றால் இந்த உலகம் இல்லை.
காதலர்களே உங்கள் காதல் உண்மையாயின் அது உங்களை சேர்த்து வைக்கும்.

காதலுக்கு வெற்றி தோல்வி என்பது கிடையாது. காதல் காலங்களை கடந்து நிற்கும்.

நெஞ்சம் மறப்பதில்லை.. அது நினைவை இழப்பதில்லை.

3 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

//நீங்கள் காதலை எதிர்கீறீர்கள் என்றால் உங்கள் கடவுளான கண்ணனை எதிர்கீறீர்கள். உங்களுக்கு கீதையை வழங்கிய கிருஷ்ண பரமாத்மாவை கலங்க படுத்துகீறீர்கள். கிருஷ்ணன் புரியாத காதல் லீலையா? எந்த மதமும் காதலை, அன்பை, நேசத்தை பறை சாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.காதலை எதிர்பவர்கள் காட்டுமிராண்டிகள். காதல் ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கிறது.அன்பு இல்லையென்றால் இந்த உலகம் இல்லை.
காதலர்களே உங்கள் காதல் உண்மையாயின் அது உங்களை சேர்த்து வைக்கும்.//
ரொம்ப பீல் பண்ணி எழுதி இருக்கீங்க நண்பா.. நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்..

பூச்சாண்டியார் said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

Kanchana Radhakrishnan said...

நல்லா இருக்கு..

Post a Comment