Saturday, February 14, 2009

நான் பூச்சாண்டி.. அஹம் பூத்நாத்..

இரண்டரை மாதங்கள் கழித்து மீண்டும் வந்துவிட்டேன். (அட, நெஜமாவே ரயிலு வண்டியிலதாங்க வந்தேன்). தொடர்ந்து பதிவு போடமுடியவில்லை. எல்லாம் பணி சுமை காரணமாகத்தான். இனியாவது தொடர்ந்து போட வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்துல்ல எவ்வளவோ மாற்றங்கள். இங்கே பட்டியலிட இந்த ஒரு பதிவு போதாது. ஓராயிரம் பதிவுகள் தேவை படும். மாற்றங்கள் மட்டுமே மாறாதது. (நீங்க சொல்றது என் காதுல விழுது, என்னடா ரொம்ப பேசறேன்னு நினைகிறீங்க. சரி சரி நேர விஷயத்துக்கு வந்துடுறேன்).

போன வாரம், என் நண்பனை (சத்தியமா நண்பி இல்ல) சந்திக்க திருவான்மியூர் கடற்கரைக்கு போயிருந்தேன். என் போறாத நேரம் அன்றைய தினம் செல் போன்ல சார்ஜ் போட மறுந்துட்டேன். செல் சுவிட்ச் ஆப் ஆகிடிச்சு. அவன எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. அவனோட நம்பரும் ஞாபகத்தில் இல்லை. என்ன செய்வது என்றே தெரியாமல் அங்கும் இங்கும் சுத்திகிட்டு கடைசியில ஒரு வழிய பார்த்துபுட்டேன். அப்ப தான் கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன். இதே நான் கல்லூரியில் படிக்கும் போது (2003) என் நண்பர்கள், சொந்தங்கள்னு அதன பேரோட நம்பரும் எனக்கு அத்துபடி. தூகதுள்ள எழுப்பி கெட கூட எந்த நம்பெர் வேனாலும் கரெக்டா சொல்வேன். அப்பவெல்லாம் இந்த செல் போன் அவ்ளோ பிரபலம் கிடையாது. அப்பதான் இந்தியாகுள்ள செல் போன் காலடி எடுத்து வச்சது. இந்த செல் போன் வாங்குனதுக்கு பிறகு எல்லாம் அதுல போட்டாச்சு. நம்ம ஞாபகத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா போயாச்சு. இப்படி தன் பல பேரு இருக்கோம். இந்த வின்ஞான வளர்ச்சியில நாம எல்லாம் நம்மளோட தனி தன்மையை இழந்து கிட்டு வருகிறோம். சுருக்கமா சொல்லனும்னா நம்ம கிட்னியை (அதாங்க பிரைன்னு) உபயோகபடுதுரது இல்லை. (நீங்க என்ன சொல்லவரீங்கன்னு புரியுது. யூஸ் பன்னாமத்தான் இத்தனையும் கண்டுபுடிசொமான்னு கேட்கறீங்க. இங்க சொல்லறது வேற). நம்மளோட ஞாபக திறனை முழுமையாக உபோயோக படுத்துவதில்லை. இதோ சில உதாரணங்கள்:
1. மேல சொன்ன மாதிரி செல் போன் நம்பெர் எல்லாம் செல்லுல வசிக்கிறது.
2. அலுவலகங்களில் எல்லா வேலையையும் செய்ய "To do list" வசிக்கிறது.
3. சின்ன சின்ன கணக்குகல போட கணினியில இருக்கும் கேல்கிலேடற தேடி போட்றது.

இதை எல்லாம் நானும் செய்றேன். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இது எல்லாம் வர்றதுக்கு முன்னாடி எப்படி செய்தோம்? இந்த அறிவு, மூளை, ஞாபக திறன் எல்லாம் நமக்கு இயற்கை அளித்த வரம். அவ்வற்றை நாம் முழுமையாக உபாயோக படுத்தி கொள்ள வேண்டும்.

சீனர்கள் எப்படி எளிய வழியில் பெருக்குகீறார்கள் என்பதை காணவும்.




எல்லோர்க்கும் என் உளமார்ந்த காதலர்/அன்பர்(அன்பர் தினம் - இப்படி தான் இன்று பல பேர் சொல்றாங்க) தின வாழ்த்துக்கள்.

குறிப்பு: இது ஒரு மொக்கை பதிவு. அதனால் தான் தலைப்பிற்கு சம்பந்தமே இல்லாமல் உள்ளே எழுதி இருக்கேன்.

5 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

காதலர் தின வாழ்த்துக்கள் நண்பா..

பூச்சாண்டியார் said...

வருகைக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன். தங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

எனக்கு நீங்க போட்ட பின்னூட்டத்தில எங்க காணும்னு கேட்டிருந்தேன்.இப்போ பதிவை பார்த்துட்டேன்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சீனர்களின் எளிய வழி உண்மையில் ஆச்சரியமாக இருந்தது.

எங்கு பிடித்தீர்கள்? மேலதிக தகவல்கள்,புத்தகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.நன்றி.

பூச்சாண்டியார் said...

நன்றி அறிவன். இது எனக்கு மின் அஞ்சலில் வந்தது. மேலும் வேறு எதாவது வந்தால் நிச்சயமாக தெரிவிக்கிறேன்.

Post a Comment