இந்த பதிவுலகத்தில் சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. அதில் தமிழர்கள் தீபாவளியை கொண்டாடலாமா? தீபாவளி ஆரியர்களின் பண்டிகை. திராவிடர்களாகிய நாம் இதை கொண்டாடலமா? இது ஒரு மூடநம்பிக்கை. இப்படி பல.
ஐயா கணவாண்களே, இன்னும் ஏன் உங்களுக்கு இந்த பிரிவினை வாதம்? திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பார்பாணியர்கள் என்றும்? அன்று யாரோ செய்த தவறை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல போகீறிர்கள்?
இன்னும் சொல்ல போனால் இத்தகைய ஆராய்ச்சியே தேவையற்றது. சிறுவர்கள், பெரியவர்கள், உற்றார்கள், உறவினர்கள் கூடி சந்தோஷமாக கொண்டாடுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உங்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் நாளாக எண்ணி கொண்டாடுங்கள். இதில் மூட நம்பிக்கை ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன். விழாக்களும் பண்டிகைகளும் இல்லை என்றால் இந்த வாழ்க்கை முறையில் நீங்கள் நிறைய உறவினர்களையும், நண்பர்களையும் இழக்க நேரிடும். ஏன் அப்படி உறவே இருப்பது உங்களுக்கு மறந்து கூட போகும். நினைத்து பாருங்கள், உங்கள் தாத்தா பாட்டியோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கு தெரிந்த அத்தனை சொந்தகளும் உங்களுக்கும் தெரியுமா? அதற்காகவே நம் முன்னோர்கள் இத்தகைய பண்டிகைகளையும், திருவிழாக்களையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
தமிழால் ஒன்றுபட்டு, இந்தியனாக வாழ்ந்து, உலக மேன்மைக்காக பாடுபடுவோம். தீபாவளியை மட்டுமல்ல அனைத்து நாட்களையும் கொண்டாடுங்கள். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். உலகத்தில் அமைதி நிலவட்டும். உலக பொருளாதாரம் தொய்வில் இருந்து மீண்டு முன்னேற்றமடயட்டும். ஈழத்தில் அமைதி திரும்பட்டும்.
பூச்சாண்டியாரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts
Wednesday, October 22, 2008
Subscribe to:
Posts (Atom)
