Saturday, November 1, 2008

கேள்வியும் பதிலும்...

இது சென்ற பதிவின் தொடர்ச்சி. எனது பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

பின்னுட்டங்களில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதில்.

1. இதில் பின்னூட்டம் போட்டவர்களில் எத்தனை பேர் தமிழில் போட்டிருக்கிறார்கள்?
பின்னூட்டம் தமிழில் போட்டால் தான் தமிழன் என்று ஒத்துகொள்வீர்களா? தமிழில் ஆர்வம் உள்ளதால் தான் தமிழ் பதிவுகளை தேடி படித்து பின்னோட்டம் இடுகிறார்கள்.

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்.

2. கிராமத்து இளைஞர்கள் எத்தனை பேர் கிராமத்து அருமை புரிந்திருக்கிறார்கள்?
எத்தனை பேர் கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உத்வி செய்து கொண்டு இருக்கீறார்கள் என்று தெரியுமா?

வாழை என்ற ஒரு அமைப்பு உள்ளது பற்றி நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. விவரம் இங்கே.

இது போல ஏராளமானோர் உள்ளனர்.
கிராமத்து அருமை என்றால் என்ன செய்ய வேண்டும்? மாட்டு வண்டியில் செல்ல வேண்டும் என்று எதிர் பார்கீரீர்களா?

3. ஐ.டி காரங்கள் என்ன சாதனை செய்திருக்கிறார்கள்? அமெரிக்கனுடையதை கொப்பி பண்ணி ஒட்டுறதை தவிர?
அப்படி செய்திருந்தால் அமெரிக்கா இங்கு வந்து நிற்காது.
சாதனைகளை பட்டியலிட இந்த இடம் போதாது.
இதோ அமுது தமிழில் இந்த கேள்வியெல்லாம் என்னிடம் எங்கோ உள்ள நீங்கள் கேட்க வழி செயபடுள்ளது போதாதா?

4. எத்தனை பேர் வெளி நாடுகளுக்கு ஓடுகிறார்கள்?
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. இதில் என்ன தவறு?

5. சமுகத்தில் மற்றவர்களுக்கு என்ன மரியாதை குடுக்கிறார்கள்?
மற்ற துறைகளில் உள்ளவர்கள் கொடுக்கும் அளவை விட இங்கு அதிகம் தான். எதாவது அரசு அலுவலகங்களில் சென்ற அனுபவம் உண்டா? இங்கே தான் அய்யா, customer satisfaction and customer respect.

6. உள் நாட்டு உற்பத்திக்கு என்ன முக்கியம் குடுக்கிறார்கள்?
கொடுத்து இருப்பதால் தான் இத்தகைய வளர்ச்சி.

7. உள் நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்?
பத்து ஆண்டுகளுக்கு பின் நோக்கி சென்று, இன்று உள்ள உள் நாட்டு கட்டமைப்பை, உள் நாட்டு வளர்ச்சியை எண்ணி பார்க்கவும்.

8. இந்தியாவின் பொருளாதாரம் என்பதை விட ஏதாவது ஒரு பலன் உண்டா?
இது ஒன்று போதாதா? மற்றவை எல்லாம் தன்னாலே வந்து விடும்.

9. நீங்கள் வாங்கும் சம்பளம் தான் மக்களின் தலையில் விலையாக விழுகிறது. ஏன்?
இதை ஏற்கனவே சொல்லி விட்டேன்.

//நாட்டில் விலைவாசி உயர்ந்தால் யாரை கேட்கணும்? மளிகை கடைக்காரனிடம் கேளுங்கள் அல்லது நிதி அமைச்சரை கேளுங்கள்.
வீட்டு வாடகையை உயர்த்தி கேட்கும் வீட்டுகாரர்களை கேளுங்கள்.

10. உங்களது உழைப்புக்கு பெறுமதி உண்டா?
எமது உழைப்பிற்கு அறிவிற்கும் தான் அய்யா, இந்த சம்பளம்.

11. யாராவது என்ன செய்கிறான் என்று தெரிந்து செய்கிறார்களா?
இங்கே உள்ளவர்கள் யாரும் ஆட்டு மந்தையாக இருக்க முடியாது. எல்லோரும் செய்வதை திருந்தத்தான் செய்கிறார்கள்.

12. கலாச்சாரம்?
அப்படியேதான் உள்ளது.

13. மொழி?
தமிழ் நன்றாகவே வளர்ந்து உள்ளது. அமெரிக்காவில் இருந்தாலும் நமது தமிழை இணையத்தில் ஏற்றி உள்ளோம்.


பின்னூட்டத்தில் பதில் அளித்திருந்த SKவிற்கு நன்றி. அவரது பதில் இங்கே.

1. இதில் பின்னூட்டம் போட்டவர்களில் எத்தனை பேர் தமிழில் போட்டிருக்கிறார்கள்? - நாங்க தினமும் உபயோகிக்கும் மொழிஇல் தட்டச்சு செய்வது எளிதானது என்பதால் அப்படி போட்டிருக்கலாம் .
2. கிராமத்து இளைஞர்கள் எத்தனை பேர் கிராமத்து அருமை புரிந்திருக்கிறார்கள்? - அதை எப்படி காட்ட வேண்டும் என்று நினைகிறீர்கள்?
3. ஐ.ரி காரங்கள் என்ன சாதனை செய்திருக்கிறார்கள்? அமெரிக்கனுடையதை கொப்பி பண்ணி ஒட்டுறதை தவிர? - முதலில் நீங்கள் என்ன சாதனை பண்ணி இருகிறீர்கள் என்பதை சொல்லுங்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த துறை ஐ. டி யை விட அதிகம் சாதித்தது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
4. எத்தனை பேர் வெளி நாடுகளுக்கு ஓடுகிறார்கள்? - வெளி நாட்டுக்கு செல்வது என்ன அப்படி ஒரு பாவமா? எங்கள் பிழைப்பு அப்படி.
5. சமுகத்தில் மற்றவர்களுக்கு என்ன மரியாதை குடுக்கிறார்கள்? - நீங்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு சென்று பாருங்கள். மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் இடத்தில் இந்த கேள்வியை கேளுங்கள்.
6. உள் நாட்டு உற்பத்திக்கு என்ன முக்கியம் குடுக்கிறார்கள்? - இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?
7. உள் நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்? மற்றவர்கள் செய்ததை விட அதிகமாகவே செய்துள்ளோம்
8. இந்தியாவின் பொருளாதாரம் என்பதை விட ஏதாவது ஒரு பலன் உண்டா? வேறு என்ன பலன் எதிர் பார்கிறீர்கள்
9. நீங்கள் வாங்கும் சம்பளம் தான் மக்களின் தலையில் விலையாக விழுகிறது. ஏன்? - எந்த கேள்வியை ஆடோகாரரிடமும் , வீட்டு உரிமையாளர்களிடமும் கேளுங்கள்.
10. உங்களது உழைப்புக்கு பெறுமதி உண்டா? தாரளமாக
11. யாராவது என்ன செய்கிறான் என்று தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் ஒன்றும் செய்வதில்லை
12. கலாச்சாரம்? - எங்களுக்கு உள்ளூர் கலாச்சாரமும் தெரியும் உலக கலாச்சாரமும் தெரியும்.
13. மொழி? - அலுவல் காரணமாக ஆங்கிலத்தில் பேசினாலும் எங்கள் மொழியை நாங்கள் விட்டு கொடுப்பதில்லை.

3 comments:

கோவி.கண்ணன் said...

வெறுமன பூச்சாண்டி காட்டாமல்,
கேள்விகளும் அதற்கான பதில்களும் நன்றாக இருக்கிறது.

பூச்சாண்டியார் said...

நன்றி கோவி.கண்ணன்

பூச்சாண்டியார் said...

நன்றி T.V.Radhakrishnan ஐயா

Post a Comment