Monday, November 3, 2008

பெண்களே, காத கொஞ்சம் குடுங்க இங்க!!!

ஆம்பளைங்க எல்லாம் நம்ம பொண்ணுங்ககிட்ட என்ன சொல்லணும் நினைக்கிறாங்க.. இத ரூம் போட்டு யோசிச்சதுல சிக்கினதுதாங்க இந்த பதிவு..

* அம்மாடி நீங்க எப்ப பார்த்தாலும், உங்க பய புள்ளைங்க கிட்ட இந்த கேள்விய கேட்டு டார்ச்சர் பண்றீங்களாம். அது என்ன கேள்வினா, "நீங்க என்னைய உண்மைலயே லவ் பண்றீங்களா?" இத ஒரு நாளைக்கு ஒரு முறை உங்க புருஷன்கிட்டயோ, அல்லது காதலன் கிட்டயோ கேட்கலனா தூக்கம் வராது போல.. இத கேட்கறது நால எங்களுக்கு உங்க மேல அதிகமான காதல் வர போறது இல்ல. இத திருப்பி திருப்பி கேட்கறது நாள எரிச்சல் தான் அதிகம் ஆகும். அப்டி காதலிக்காம உங்க மேல பாசம் இல்லாத இருந்த உங்களைய விட்டு எப்பவோ போய் இருப்பாய்ங்க.. புருஞ்சிக்கங்கோ..

* அடுத்த மேட்டர் என்னன்னா உங்களடுயவர் எல்லாத்துலயம் பெஸ்டா இருக்கணும்னு நினைக்ரதுல தப்பு கிடையாது. ஆனா இன்னொனுத்தையும் நீங்க தெரிஞ்சுக்கணும். அவங்களும் சாதாரண மனுஷங்கதான். அத அண்டர்லைன் பண்ணிக்குங்கோ. சூப்பர் மேன் மாதிரி தல கீழா நின்னு சாகசம் பண்ண முடியாது, தெரியாது. எதோ உங்கள சந்தோசமா வச்சிப்போம்.

* நீங்க சொல்ற இன்னொரு கம்பளைண்ட் என்னன்னா, இவிங்களுக்கு வீட்ட நீட்டாவே வச்சிக்க தெரியாது. அட, அப்டி இருக்கணும்னு சட்டமா? வீடே நீட்டா இல்லைனாலும், ஒரே களேபரமா இருந்தாலும் எங்களோட சட்டைய எங்க வச்சி இருந்தாலும் அத எடுத்துருவோம் இல்ல. அவ்ளோதான் மேட்டரு.

* நாங்க, நீங்க அழகா இருக்கீங்கனு சொன்ன எங்க மனுசுல இருந்துதான் அந்த வார்த்த வருது. அதுவும் எல்லாரயும் பார்த்து சொல்லிடறது இல்ல. குறிப்பிட்ட சில்ரதான் சொல்லுவோம். உங்களுக்கு ரெண்டு கொம்பு ஒரு வாலு இருந்தா அழகா இருக்கீங்கனு சொல்ல எங்களுக்கு என்ன பைத்தியமா?

* நாங்களும் வீட்ல உங்களுக்கு உதவி செஞ்சிகிட்டு தான் இருக்கோம். செய்றதே இல்லைங்கறது சில மனைவிமார்களின் புலம்பல். அதெல்லாம் உண்மை இல்லைங்கோ. நாங்க எல்லாம், எங்களோட பல்ல நாங்களே தான் துலக்கிக்கிறோம். நாங்களே எங்களுக்காக சாப்பிடுறோம். எங்களுக்காக நாங்களே தான் தூங்கறோம். இதுவே உங்களுக்கு செய்யும் உதவி தானே.

* எங்களுக்கு ஐஸ்வர்யா ராயும், ஏஞ்சலீனா ஜூலியும் அழகு தான். உங்களைய காதலிக்றதனாளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டதாளையும் வேற பெண்களை பார்ககூடாதா? (என்னா ஒரு வில்லத்தனம்). இருந்தாலும் அந்த ஐஸ்வர்யா ராயும், ஏஞ்சலீனா ஜூலியும் உங்களுக்கு பின்னாடி தான்.

* லேப்டுனா லெப்டு தான். ரைட்டுனா ரைட்டு தான். இன்னொரு தடவ சொல்றேன், லேப்டுனா லெப்டு தான், உங்க கற்பனையில உள்ள மாதிரி வேற திசை கிடையாது. நீங்களும் குழம்பி உங்க பின்னாடி வரவங்களுயும் குழப்பாதீங்க. இது வாழ்க்கைங்கற ரோட்ல ட்ராபிக் ஜாம் உண்டாக்கிடும்.

* ஷ்ஷ்ஷ்ஷ்.. நாங்களும் அழுவோம். ஆனா அது உங்களுக்கு தெரிஞ்சிடகூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்போம். ஒரு ஆம்பள எப்ப தெரியுமா முத தடவையா அழுவான், அவன் ஒரு பொண்ண விட்டு பிரியும் போதுதான்.

என்ன, நான் ரூம் போட்டு யோசிச்சு எழுதனது சரிதான. எதாவது விட்டு போய் இருந்தா நீங்களும் சொல்லுங்க பின்னூட்டதுல.

4 comments:

கோவி.கண்ணன் said...

:)))

சூப்பரு

//ஒரு ஆம்பள எப்ப தெரியுமா முத தடவையா அழுவான், அவன் ஒரு பொண்ண விட்டு பிரியும் போதுதான்.//

ஜோக்குக்கு நடுவே செண்டிமெண்ட் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

//பெண்களே, காத கொஞ்சம் குடுங்க இங்க!!! //

இப்படி கிட்டே கூப்பிட்டு காது தோட்டை அடகு வைக்கக் கழட்டிட்டு போறதைப் பத்தி சொல்லப் போறிங்களோன்னு நினைச்சேன் :)

பூச்சாண்டியார் said...

நன்றி, கோவி.கண்ணன்

ஆட்காட்டி said...

பட்டறிவு.

பூச்சாண்டியார் said...

ஆம். என் நண்பர்கள் பட்டறிவு. எனக்கோ கேள்வி அறிவு. வருகைக்கு நன்றி ஆட்காட்டி

Post a Comment