Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, November 3, 2008

பெண்களே, காத கொஞ்சம் குடுங்க இங்க!!!

ஆம்பளைங்க எல்லாம் நம்ம பொண்ணுங்ககிட்ட என்ன சொல்லணும் நினைக்கிறாங்க.. இத ரூம் போட்டு யோசிச்சதுல சிக்கினதுதாங்க இந்த பதிவு..

* அம்மாடி நீங்க எப்ப பார்த்தாலும், உங்க பய புள்ளைங்க கிட்ட இந்த கேள்விய கேட்டு டார்ச்சர் பண்றீங்களாம். அது என்ன கேள்வினா, "நீங்க என்னைய உண்மைலயே லவ் பண்றீங்களா?" இத ஒரு நாளைக்கு ஒரு முறை உங்க புருஷன்கிட்டயோ, அல்லது காதலன் கிட்டயோ கேட்கலனா தூக்கம் வராது போல.. இத கேட்கறது நால எங்களுக்கு உங்க மேல அதிகமான காதல் வர போறது இல்ல. இத திருப்பி திருப்பி கேட்கறது நாள எரிச்சல் தான் அதிகம் ஆகும். அப்டி காதலிக்காம உங்க மேல பாசம் இல்லாத இருந்த உங்களைய விட்டு எப்பவோ போய் இருப்பாய்ங்க.. புருஞ்சிக்கங்கோ..

* அடுத்த மேட்டர் என்னன்னா உங்களடுயவர் எல்லாத்துலயம் பெஸ்டா இருக்கணும்னு நினைக்ரதுல தப்பு கிடையாது. ஆனா இன்னொனுத்தையும் நீங்க தெரிஞ்சுக்கணும். அவங்களும் சாதாரண மனுஷங்கதான். அத அண்டர்லைன் பண்ணிக்குங்கோ. சூப்பர் மேன் மாதிரி தல கீழா நின்னு சாகசம் பண்ண முடியாது, தெரியாது. எதோ உங்கள சந்தோசமா வச்சிப்போம்.

* நீங்க சொல்ற இன்னொரு கம்பளைண்ட் என்னன்னா, இவிங்களுக்கு வீட்ட நீட்டாவே வச்சிக்க தெரியாது. அட, அப்டி இருக்கணும்னு சட்டமா? வீடே நீட்டா இல்லைனாலும், ஒரே களேபரமா இருந்தாலும் எங்களோட சட்டைய எங்க வச்சி இருந்தாலும் அத எடுத்துருவோம் இல்ல. அவ்ளோதான் மேட்டரு.

* நாங்க, நீங்க அழகா இருக்கீங்கனு சொன்ன எங்க மனுசுல இருந்துதான் அந்த வார்த்த வருது. அதுவும் எல்லாரயும் பார்த்து சொல்லிடறது இல்ல. குறிப்பிட்ட சில்ரதான் சொல்லுவோம். உங்களுக்கு ரெண்டு கொம்பு ஒரு வாலு இருந்தா அழகா இருக்கீங்கனு சொல்ல எங்களுக்கு என்ன பைத்தியமா?

* நாங்களும் வீட்ல உங்களுக்கு உதவி செஞ்சிகிட்டு தான் இருக்கோம். செய்றதே இல்லைங்கறது சில மனைவிமார்களின் புலம்பல். அதெல்லாம் உண்மை இல்லைங்கோ. நாங்க எல்லாம், எங்களோட பல்ல நாங்களே தான் துலக்கிக்கிறோம். நாங்களே எங்களுக்காக சாப்பிடுறோம். எங்களுக்காக நாங்களே தான் தூங்கறோம். இதுவே உங்களுக்கு செய்யும் உதவி தானே.

* எங்களுக்கு ஐஸ்வர்யா ராயும், ஏஞ்சலீனா ஜூலியும் அழகு தான். உங்களைய காதலிக்றதனாளையும் கல்யாணம் பண்ணிக்கிட்டதாளையும் வேற பெண்களை பார்ககூடாதா? (என்னா ஒரு வில்லத்தனம்). இருந்தாலும் அந்த ஐஸ்வர்யா ராயும், ஏஞ்சலீனா ஜூலியும் உங்களுக்கு பின்னாடி தான்.

* லேப்டுனா லெப்டு தான். ரைட்டுனா ரைட்டு தான். இன்னொரு தடவ சொல்றேன், லேப்டுனா லெப்டு தான், உங்க கற்பனையில உள்ள மாதிரி வேற திசை கிடையாது. நீங்களும் குழம்பி உங்க பின்னாடி வரவங்களுயும் குழப்பாதீங்க. இது வாழ்க்கைங்கற ரோட்ல ட்ராபிக் ஜாம் உண்டாக்கிடும்.

* ஷ்ஷ்ஷ்ஷ்.. நாங்களும் அழுவோம். ஆனா அது உங்களுக்கு தெரிஞ்சிடகூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்போம். ஒரு ஆம்பள எப்ப தெரியுமா முத தடவையா அழுவான், அவன் ஒரு பொண்ண விட்டு பிரியும் போதுதான்.

என்ன, நான் ரூம் போட்டு யோசிச்சு எழுதனது சரிதான. எதாவது விட்டு போய் இருந்தா நீங்களும் சொல்லுங்க பின்னூட்டதுல.

Thursday, October 30, 2008

ஐ.டி மேல் ஏன் இந்த கொலை வெறி?

சில காலங்களாக ஐ.டி துறையினறை மைய படுத்தி செய்திகள் வருவதும், அதன் ஊழியர்களை இழிவு படுத்தி எழுதுவதும் அதிகரித்து கொண்டே போகிறது. இது சமூகத்தில் ஐ.டி ஊழியர்கள் என்றாலே இப்படி தான் என்று நினைக்க வைத்து விட்டது. எங்கோ ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் செய்த தவற்றால் இந்த ஐ.டி யில் உள்ளவர்களே இப்படித்தான் என்று எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏமையா, உமக்கு எல்லாம் இங்கே நடக்கும் நல்லவையே கண்களில் படாதா. இல்லை பட்டும் படாதது போல் இருக்கீறீர்களா?

எத்தனை ஐ.டி ஊழியர்கள், சமூக சிந்தனையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது உமக்கு தெரியுமா?

எத்தனை ஐ.டி ஊழியர்கள், ஏழை குழுந்தைகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உமது காதுகளுக்கு எட்டவில்லையா?

இன்னும் எத்தனை ஐ.டி நிறுவங்களே, இத்தகைய சமூக சிந்தனைகளை ஊக்குவித்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

எத்தனை ஐ.டி ஊழியர்கள் கிராமங்களில் இருந்து படித்து வந்து இன்று இந்தியாவின் பொருளாதரத்தை மேம்படுத்த வழி வகை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

அவ்வளவு ஏன், இங்கே சமூக சிந்தனையுடனும், பல்சுவைகளுடனும் இணையத்திலே, தமிழை நிலை நாட்டி கொண்டிருபவர்கள் தமிழ் பயின்ற ஐ.டி ஊழியர்களே அதிகம் என்பது உமக்கு தெரியாத ஒன்றா?

இதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் போவதற்கு உங்கள் கண்களில் என்ன மஞ்சள் காமாலையா?
இங்கே எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருகின்றன. அதை பற்றி எழுதுங்கள். அதை விடுத்து ஐ.டியினால் கலாச்சார சீரழிவு என்பது போல் ஒரு மாயையை உருவாக்காதீர்கள்.

அது என்ன?
நாட்டில் விலைவாசி உயர்வா? ஐ.டி தான் காரணம்.
வீட்டு வாடகை அதிகமா? ஐ.டி தான் காரணம்.
ஆட்டோக்காரன் ஆட்டோ வாடகை அதிகமாக கேட்டால்? ஐ.டி தான் காரணம்.

அத்தோடு நிற்காமல், இன்னும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், கடந்த வாரம், சென்னையில் ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டான் என் நண்பன்.
சரி இதை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க செல்லில் பேசிக்கொண்டிருந்த போது, பிடித்து விட்டார்கள் ட்ராபிக் போலீஸ் புண்ணியவான்கள். (கவனிக்க: கார் ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு விட்டது. கார் பத்து நிமிஷமாக நகரவில்லை). அவர்கள் இவனின் அனுமதி பெறாமல் வண்டியில் ஏறிக்கொண்டு "என்ன ஐ.டியா? எடு 1500 ரூபாய். பைன் கட்டு. இல்லை என்றால் எனக்கு 500 ரூபாய் கொடு. ஐ.டி தானே". இது எந்த வகையில் நியாயம்?

டிராபிக்கை ஒழுங்கு படுத்த வேண்டிய போலீஸ் காருக்குள் ஏறி லஞ்சம் கேட்பதை கேளுங்கள்.

நான் தெரியாமல் தான் இவர்களை பார்த்து கேட்கிறேன், நாட்டில் விலைவாசி உயர்ந்தால் யாரை கேட்கணும்? மளிகை கடைக்காரனிடம் கேளுங்கள் அல்லது நிதி அமைச்சரை கேளுங்கள். அதை விட்டுவிட்டு ஐ.டி என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

வீட்டு வாடகையை உயர்த்தி கேட்கும் வீட்டுகாரர்களை கேளுங்கள். ஐ.டியை நோக்கி கை நீட்டுவது எந்த வகையில் நியாயம்?

சமூகத்தில் சீர்கேடு என்பது ஏதோ ஐ.டி வந்த பிறகு தான் நடப்பது போல் சித்தரிப்பது உச்சகட்ட கொடுமை. இதற்கு முன் இந்த நாட்டில் யாரும் குடிப்பது இல்லை என்பது போலவும், இப்பொழுதுதான் டாஸ்மாக் அதிகமாகிவிட்டது போலவும் கொக்கரித்து கொண்டு இருக்கிறார்கள்.

நாட்டில் விபச்சாரம் இன்னும் சில இத்யாதிகளையும் இப்போதுதான் இவர்கள் கேள்விபடுகிற மாதிரி எழுதுவதெல்லாம் ரொம்ப டூ மச் ரகம்.

உங்களுக்கு எல்லாம் அப்படி என்னதான் இந்த ஐ.டி மேல் அப்படி ஒரு காண்டு?!!!

Saturday, October 25, 2008

எங்கே செல்லும் இந்த பாதை...

காட்சி 1:
இடம்
: ஆர்.டி.ஒ அலுவலகம் நேரம்: காலை மணி 10:00

ராமு ஏற்கனவே இரண்டு சக்கர வாகனத்திற்கும் நான்கு சக்கர வாகனத்திற்கும் லைசென்ஸ் எடுக்க LLR வாங்கி வைத்து இருந்தான். இன்று லைசென்ஸ் வாங்கி விட வேண்டும். அதற்காக இன்று வண்டியை Break Inspector முன்னாடி 8 போட்டு காட்டி, அப்படியே காரையும் ஓட்டி காட்ட வேண்டும்.

அன்றைய தினத்தில் மொத்தம் 37 பேர் பதிவு செய்திருந்தார்கள். இவன் 12வது ஆளாக பதிவு செய்திருந்தான். அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு மரத்தடியில் காத்திருந்தான். மணி 11:15 Break Inspector வந்தார். கூடவே ஒரு கைத்தடியும் வந்தான். அவன் ஒவ்வொரு பெயராக படிக்க, அவர்கள் எடுத்து வந்திருந்த வண்டியை ஓட்டி காண்பித்தார்கள். ராமுவும் தான் கொண்டு வந்திருந்த வண்டியை ஓட்டி கண்பித்தான். அடுத்தவர்கள் அடுத்தவர்கள் என்று 37 பேரும் ஓட்டி முடித்தார்கள். Break Inspector யாருக்கும் எந்த முடிவையும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றுவிட்டார். அந்த கைத்தடியும் உள்ளே சென்று சற்று நேரம் கழித்து வெளியில் வந்தான். விண்ணப்பிதவர்களை ஒவ்வொருவராக Break Inspector இருந்த அறை உள்ளே அனுப்பினான். ராமுவும் தனது சுற்று வந்த போது உள்ளே சென்றான். அந்த பிரேக் இன்ஸ்பெக்டர் அவனது விண்ணப்பதை பார்த்து,

வாயா.. நீ நல்லாத்தான் வண்டி ஓட்டறே...
சரி, ஒரு 1000 ரூபாய் எடு. உனக்கு இப்பவே டூவீலர் போர்விளர் லைசென்ஸ் தர சொல்றேன். ராமுவிற்கு ஒன்றும் புரியவில்லை.

சார், நான் தான் நல்ல ஒட்றேன்னு சொன்னிங்களே.

தம்பி, இங்க பாரு, நான் ஒரு நாளைக்கு 17 பேருக்கு தான் லைசென்ஸ் தர முடியும். இன்னிக்கின்னு பார்த்து 35 பேரு வந்திருக்கீங்க. என்ன பண்ண சொல்ற..

சார், நான் டிரைவர் ஆகி தான் என் குடும்பத்த காப்பத்தனும். என்கிட்ட அவ்ளோ பணம் இல்ல..

இங்க பாரு, பணம் இருந்த லைசென்ஸ்.. இல்லனா கிளம்பு.

காட்சி 2:
இடம்: மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகம்.
நேரம்
: காலை 11:00 மணி.

சோமு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்பிப்பதர்க்காக அவன் இங்கு வந்திருக்கிறான். இவன் இந்த வருடம் தான் B.E படித்து முடித்தான். அந்த விண்ணப்பத்தில் சில இடங்களில், சந்தேகம் இருந்ததால் அவைகளை நிரப்பாமால் கையில் வைத்து இருந்தான். அங்கே விண்ணப்பத்தை பெற்று கொள்ளும் அதிகாரியிடம் சென்று,
சார், எனக்கு இந்த அப்ளிகேசனில் கொஞ்ச எடுத்துள்ள என்ன பில் பண்றதுன்னு தெரியல. கொஞ்சம் சொல்றீங்களா?

என்ன படிச்சிருக்கே?

சார், B.E.

B.E. படிச்சிருக்கே இந்த அப்ளிகேசன பில் பண்ண தெரியல?

இதல கொஞ்ச டெர்ம்ஸ் புதுசா இருக்கு அதான்.

இங்க பாரு, உனக்கு பதில் சொல்லறதுக்கு எல்லாம் எனக்கு சம்பளம் கொடுக்கல. ஒரு 500 ரூபாய குடு. பக்கத்துல ஒரு பய்யன வேலைக்கு வச்சி இருக்கேன். அவன் பில் பண்ணி கொடுப்பான்.


இதெல்லாம், எந்த நாடகத்திலோ, சினிமாவிலோ வரும் காட்சிகள் அல்ல. எந்த கதையிலும் அல்ல. அத்தனையும் நம் நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் நடக்கிற அப்பட்டமான உண்மை. எங்கும் லஞ்சம். எதிலும் லஞ்சம்.

ஒரு நாளைக்கு ஒருவரிடம் இருந்து 1000 ரூபாய் என்றால், 35 பேருக்கு எவ்வளவு, ஒரு நாளைக்கு எவ்வளவு, ஒரு மாதத்திற்கு எவ்வளவு, ஒரு வருடத்திற்கு எவ்வளவு? கணக்கு போட்டு பார்த்தால் தலையே சுற்றுகிறது. இந்த காசெல்லாம் கருப்பு பணமாகிறது. இந்தியப் பொருளாதாரம் இங்கே கொஞ்சம் கொஞ்சமாக செல் அரிக்கப்படுகிறது. இவை மட்டுமா, உங்களிடம் வரும் எத்தகைய மக்களையும் மதிப்பதும் இல்லை. அனைவருக்கும் விளங்கும்படி சொன்னால், உங்கள் சேவையில் customer satisfaction என்பது ஏட்டளவில் கூட இல்லை. லஞ்சம் வாங்கும் உங்களிடம் எப்படி இதை எதிர்பார்க்க முடியும்?

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களே, சற்றே எண்ணி பாருங்கள். உங்களுக்கு மக்கள் எழுதும் விண்ணப்ப படிவங்களிலோ அல்லது கடிதங்களிலோ எப்படி எழுதுகிறார்கள் தெரியுமா?

மதிப்பிற்குரிய ஐயா,
........................................................................................
......................................................................................................................
......................................................................................................................
தாங்கள் ஆவன செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
...................................................

வார்த்தைகளை கவனியுங்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதையை பாருங்கள். மக்களின் பணிவை பாருங்கள். மக்களின் பணத்தை பார்க்காதீர்கள்.
மக்களுக்கு சேவை செய்யவே உங்களை அரசாங்கம் பணி அமர்திவுள்ளது. மக்களிடம் லஞ்சம் வாங்குவதர்க்கல்ல.

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.. " என்று பாடி வைத்தான் பாரதி..
"என்று ஒழியும் இந்த லஞ்சம்.. " என்று மக்களை பாட வைத்து விட்டீர்கள்.

எங்கே செல்லும் இந்த பாதை...

ஆவதும் உங்களாலே, நாடு
ஆழிவதும் உங்களாலே..