Saturday, October 25, 2008

எங்கே செல்லும் இந்த பாதை...

காட்சி 1:
இடம்
: ஆர்.டி. அலுவலகம் நேரம்: காலை மணி 10:00

ராமு ஏற்கனவே இரண்டு சக்கர வாகனத்திற்கும் நான்கு சக்கர வாகனத்திற்கும் லைசென்ஸ் எடுக்க LLR வாங்கி வைத்து இருந்தான். இன்று லைசென்ஸ் வாங்கி விட வேண்டும். அதற்காக இன்று வண்டியை Break Inspector முன்னாடி 8 போட்டு காட்டி, அப்படியே காரையும் ஓட்டி காட்ட வேண்டும்.

அன்றைய தினத்தில் மொத்தம் 37 பேர் பதிவு செய்திருந்தார்கள். இவன் 12வது ஆளாக பதிவு செய்திருந்தான். அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு மரத்தடியில் காத்திருந்தான். மணி 11:15 Break Inspector வந்தார். கூடவே ஒரு கைத்தடியும் வந்தான். அவன் ஒவ்வொரு பெயராக படிக்க, அவர்கள் எடுத்து வந்திருந்த வண்டியை ஓட்டி காண்பித்தார்கள். ராமுவும் தான் கொண்டு வந்திருந்த வண்டியை ஓட்டி கண்பித்தான். அடுத்தவர்கள் அடுத்தவர்கள் என்று 37 பேரும் ஓட்டி முடித்தார்கள். Break Inspector யாருக்கும் எந்த முடிவையும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றுவிட்டார். அந்த கைத்தடியும் உள்ளே சென்று சற்று நேரம் கழித்து வெளியில் வந்தான். விண்ணப்பிதவர்களை ஒவ்வொருவராக Break Inspector இருந்த அறை உள்ளே அனுப்பினான். ராமுவும் தனது சுற்று வந்த போது உள்ளே சென்றான். அந்த பிரேக் இன்ஸ்பெக்டர் அவனது விண்ணப்பதை பார்த்து,

வாயா.. நீ நல்லாத்தான் வண்டி ஓட்டறே...
சரி, ஒரு 1000 ரூபாய் எடு. உனக்கு இப்பவே டூவீலர் போர்விளர் லைசென்ஸ் தர சொல்றேன். ராமுவிற்கு ஒன்றும் புரியவில்லை.

சார், நான் தான் நல்ல ஒட்றேன்னு சொன்னிங்களே.

தம்பி, இங்க பாரு, நான் ஒரு நாளைக்கு 17 பேருக்கு தான் லைசென்ஸ் தர முடியும். இன்னிக்கின்னு பார்த்து 35 பேரு வந்திருக்கீங்க. என்ன பண்ண சொல்ற..

சார், நான் டிரைவர் ஆகி தான் என் குடும்பத்த காப்பத்தனும். என்கிட்ட அவ்ளோ பணம் இல்ல..

இங்க பாரு, பணம் இருந்த லைசென்ஸ்.. இல்லனா கிளம்பு.

காட்சி 2:
இடம்: மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகம்.
நேரம்
: காலை 11:00 மணி.

சோமு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்பிப்பதர்க்காக அவன் இங்கு வந்திருக்கிறான். இவன் இந்த வருடம் தான் B.E படித்து முடித்தான். அந்த விண்ணப்பத்தில் சில இடங்களில், சந்தேகம் இருந்ததால் அவைகளை நிரப்பாமால் கையில் வைத்து இருந்தான். அங்கே விண்ணப்பத்தை பெற்று கொள்ளும் அதிகாரியிடம் சென்று,
சார், எனக்கு இந்த அப்ளிகேசனில் கொஞ்ச எடுத்துள்ள என்ன பில் பண்றதுன்னு தெரியல. கொஞ்சம் சொல்றீங்களா?

என்ன படிச்சிருக்கே?

சார், B.E.

B.E. படிச்சிருக்கே இந்த அப்ளிகேசன பில் பண்ண தெரியல?

இதல கொஞ்ச டெர்ம்ஸ் புதுசா இருக்கு அதான்.

இங்க பாரு, உனக்கு பதில் சொல்லறதுக்கு எல்லாம் எனக்கு சம்பளம் கொடுக்கல. ஒரு 500 ரூபாய குடு. பக்கத்துல ஒரு பய்யன வேலைக்கு வச்சி இருக்கேன். அவன் பில் பண்ணி கொடுப்பான்.


இதெல்லாம், எந்த நாடகத்திலோ, சினிமாவிலோ வரும் காட்சிகள் அல்ல. எந்த கதையிலும் அல்ல. அத்தனையும் நம் நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் நடக்கிற அப்பட்டமான உண்மை. எங்கும் லஞ்சம். எதிலும் லஞ்சம்.

ஒரு நாளைக்கு ஒருவரிடம் இருந்து 1000 ரூபாய் என்றால், 35 பேருக்கு எவ்வளவு, ஒரு நாளைக்கு எவ்வளவு, ஒரு மாதத்திற்கு எவ்வளவு, ஒரு வருடத்திற்கு எவ்வளவு? கணக்கு போட்டு பார்த்தால் தலையே சுற்றுகிறது. இந்த காசெல்லாம் கருப்பு பணமாகிறது. இந்தியப் பொருளாதாரம் இங்கே கொஞ்சம் கொஞ்சமாக செல் அரிக்கப்படுகிறது. இவை மட்டுமா, உங்களிடம் வரும் எத்தகைய மக்களையும் மதிப்பதும் இல்லை. அனைவருக்கும் விளங்கும்படி சொன்னால், உங்கள் சேவையில் customer satisfaction என்பது ஏட்டளவில் கூட இல்லை. லஞ்சம் வாங்கும் உங்களிடம் எப்படி இதை எதிர்பார்க்க முடியும்?

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களே, சற்றே எண்ணி பாருங்கள். உங்களுக்கு மக்கள் எழுதும் விண்ணப்ப படிவங்களிலோ அல்லது கடிதங்களிலோ எப்படி எழுதுகிறார்கள் தெரியுமா?

மதிப்பிற்குரிய ஐயா,
........................................................................................
......................................................................................................................
......................................................................................................................
தாங்கள் ஆவன செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
...................................................

வார்த்தைகளை கவனியுங்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதையை பாருங்கள். மக்களின் பணிவை பாருங்கள். மக்களின் பணத்தை பார்க்காதீர்கள்.
மக்களுக்கு சேவை செய்யவே உங்களை அரசாங்கம் பணி அமர்திவுள்ளது. மக்களிடம் லஞ்சம் வாங்குவதர்க்கல்ல.

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.. " என்று பாடி வைத்தான் பாரதி..
"என்று ஒழியும் இந்த லஞ்சம்.. " என்று மக்களை பாட வைத்து விட்டீர்கள்.

எங்கே செல்லும் இந்த பாதை...

ஆவதும் உங்களாலே, நாடு
ஆழிவதும் உங்களாலே..

2 comments:

Krishna said...

Arumai Arumai. Samooga seeralivai romba nalla tholurichi katerukeenga.

Innum niraya eluthunga

-- Krishna

பூச்சாண்டியார் said...

வருகைக்கு நன்றி கிருஷ்ணா..

Post a Comment