கம்பன் அமெரிக்காவில் பிறந்திருந்து ராமாயணம் எழுதியிருந்தால் 'கடன் கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று தான் எழுதி இருப்பான். அந்த அளவுக்கு கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க வழி தெரியாமல் கலங்கி நிற்கின்றன அமெரிக்க வங்கிகள்.
கடன் வாங்குவது கௌரவ குறைச்சல் என்பது நமக்குதான். அமெரிக்காவில் இது ரொம்ப சாதாரணம். அங்குள்ள வங்கிகள், நிதி நிறுவங்களின் கொள்கையே அத்தனை பேரையும் கடனாளி ஆக்க வேண்டும் என்பதுதான். அதனாலதான் விதவிதமான கடன்களை அள்ளிகொடுத்தன. அதில் அமெரிக்காவையே விழ்த்திய பிரமாஸ்திரம் வீட்டு கடன் தான்.
வீடு வாங்க கடன் கொடுத்தது தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்கு கொடுக்காதது தான் இந்த நிலைக்கு காரணம். அமெரிக்காவில், ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ளது போல் நேரடியாக வங்கியில் கடன் பெற முடியாது. மார்ட்கேஜ் நிறுவனங்களில் தான் வாங்க முடியும்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட பிறகு 2002-ல் அங்கு மர்த்கஜ் கடன்கள் மீதான வட்டி விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டன. இதனால் குறைந்த வருமானம் உள்ளவர்களும் வீட்டு கடன் பெற முடிந்தது. அதனால் மார்ட்கேஜ் நிறுவனங்கள் கூவிக்கூவி கடன் கொடுத்தன. கடன்பெறவே தகுதி இல்லாதவர்கள், திருப்பி செலுத்த முடியாதவர்கள், இரண்டாவது வீடு வாங்குபவர்கள் என்று வந்தவர் போனவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்தனர். இதனால் கடனை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து.
மார்ட்கேஜ் நிறுவனங்கள் இந்த கடன்களை வேறு நிதி நிறுவங்களுக்கு விற்றன. இந்த நிறுவங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் இழப்பீடு தருவதாக சொல்லி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி கொடுத்தன. இப்படி ஒரு கடனுக்கு பலரும் பங்காளிகளாக வந்தனர்.
இதற்கிடையில் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி அடைய துவங்கியது. இதனால் வீட்டு கடனுக்கு செலுத்தவேண்டிய மாத தவணை (EMI) அதிகமானது. கடன் வங்கியவர்களால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. அதே சமயம் வீடுகளின் மதிப்பு சர்ரென குறைந்தது. கடனுக்கு பதில் வீட்டை எடுத்துக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ள பட்டன வங்கிகள். ஆக, வீட்டு கடனை வாங்கியவர் திருப்பி செலுத்த முடியாமல் போன போது எல்லோரும் சிக்கி கொண்டனர்.
யாரெல்லாம் பாதிக்க பட்டார்கள்:
பியர் ஸ்டர்ன்ஸ்/பேனி மே/பிரெடி மேக்:
முதன்முதலில் இந்த சிக்கலில் மாட்டி வெளிவந்தது பியர் ஸ்டர்ன்ஸ் நிறுவனம் தான். இதன் இரண்டு மிகப்பெரிய ஹெட்ஜ் பண்டு திட்டங்களுக்கு மதிப்பில்லாமல் போனது. இந் நிறுவன பங்கின் 52 வார அதிகபட்ச விலை 133.20 டாலர். ஆனால், இந்த பிரிச்சனையால் 10 டாலர்களுக்கு கேட்கப்பட்டது. J.P. morgan சேல்ஸ் வங்கி ஒரு பங்கு 10 டாலர் என்ற மதிப்பில் இந்நிறுவனத்தை வாங்கியது.
அமெரிக்காவின் பெடெரல் வங்கியும், இங்கிலாந்தின் மத்திய வங்கியும் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து, தற்காலிகமாக நிலைமையை சமாளித்தன. அதன் பிறகு அமெரிக்காவின் ஹௌசிங் பினான்ஸ் நிருவன்களான பேனி மே, பிரெடி மேக் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இவை இரண்டும் தான் அமெரிக்காவின் அறுபது சதவிகித மார்ட்கேஜ் கடன்களை வழங்கிஇருந்தன. இதனை பெடெரல் ரிசர்வ் தத்து எடுத்துகொண்டது.
லேமன்/மேரில் லின்ச்:
இதுவரை நடந்ததெல்லாம் ஆரம்பம்தான் இனிதான் உச்சகட்டமே என்பது போல 158 வருட பாரம்பரியம் மிக்க முதலீட்டு வங்கியான 'லேமன் பிரதர்ஸ்' திவாலானது. இவங்கி, வீடுகள், வணிக வளாகங்களில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்க ஹௌசிங் சந்தையின் விழ்ச்சியால் இவ்வங்கி கொடுத்த மருகடன்கள் மற்றும் அதன் சொத்துகளின் மதிப்பு அடிமட்டத்துக்கு போனது. அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் திவாலானது.
அதே நாளில் உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான மெரில் லின்ச் தனது இயலாமையை அறிவித்தது. இதனை பேங்க் ஆப் அமெரிக்க எடுத்துக்கொள்வதாக அறிவித்தால் மெரில் லின்ச் மானம் காப்பாற்ற பட்டது.
ஏ.ஐ.ஜி:
அமெரிக்காவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் இது. மார்ட்கேஜ் கடன்களுக்கு கொடுத்த நிதிக்கான காப்பீட்டை வழங்கியது இந்நிறுவனம்தான். 85 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டு திவாலாக இருந்தது. அந்த தொகையை கடனுதவியாக அமெரிக்காவின் பெடெரல் ரிசர்வ் வழங்கி காப்பற்றி உள்ளது. மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் 79.9 சதவிகித பங்குகள் பெடெரல் ரிசர்வ் எடுத்துக் கொண்டுள்ளது.
வாஷிங்டன் மீயுசுவல்/வாகோவியா
சரியாக 119 வருட அனுபவமுள்ள வங்கித்துறை நிறுவனம் வாஷிங்டன் மீயுசுவல் நிறுவனம். இதுவும் தான் திவாலாகப் போகும் நிலையில் உள்ளதை அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளது. இது வழங்கியுள்ள மார்ட்கேஜ் கடன்கள் மூலம் சுமார் 19 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வங்கி லேமனுக்கு அடுத்து பெரிய அளவில் பாதித்துள்ள வங்கி. இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் ஆறாவது பெரிய வங்கியான வாகூவியவும் தப்பவில்லை. இந்த வங்கியும் யாராவது வாங்க முன் வருவார்களா என காத்திருக்கிறது.
இப்படி திவால் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவி செய்ய மீட்பு தொகையாக 700 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு ஒதிக்கீடு செய்து உள்ளது. புதிராக தொடரும் இந்த கதை எங்குபோய் முடியும் என்றே தெரியவில்லை.
முதல் செங்கல்:
அமெரிக்காவை சேர்ந்த 158 வருட பாரம்பரியம் மிக்க லேமன் பிரதர்ஸ் வங்கியின் அஸ்திவாரம் நொரிங்கிபோனது கடந்த செப்டம்பர் 14 என்றாலும், அதன் முதல் செங்கல் 2002-ஆம் ஆண்டிலேயே உருவபட்டுவிட்டது.
2001 செப்டேமேபேர் 11-ல் உலக வர்த்தக மையம் இரட்டை கோபுரம் தகர்கபட்டபோது, அந்தக் கட்டடத்தின் மூன்று தளங்களை கையில் வைத்து இருந்தது லேமன் வங்கி. இர்ரடை கோபுரம் தகர்கபட்டதும், அதன் தொடர்ச்சியாக 2002-ல் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் மதிப்பு சரியா ஆரம்பித்தது. பிறகு சப் ப்ரீம் மார்ட்கேஜ் விவகாரம் எழ, அதன் விளைவாகவே லேமன் வங்கி பலியாகி போனது.
கடைசி நிமிடங்கள்:
அமெரிக்காவின் டிரஷரி செக்ரடரியான ஹென்றி எம். பால்சன் ஜுனியரும், பெடெரல் ரிசர்வ் அதிகாரிகளும், லேமன் பிரதர்ஸ் வங்கியை வாங்கலாம். அதை திவாலாக விடவேண்டாம் என்று ஆலோசனை சொன்னபோது யாரும் வாயே திறக்கவில்லை. அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதி நிறுவனமான இந்த வங்கியை வாங்குவதற்கு தகுதியான பார்க்லேஸ் வங்கியும் பேங்க் ஆப் அமெரிகாவும்குட, 'இந்த டீல் வேலைக்கு ஆகாது' என்கிற ரேஞ்சில் சைலேண்டக இருந்துவிட்டது... கடைசி முயற்சியாக லேமன் வங்கி அதன் பங்குக்கு கொரிய நிதி நிறுவனம் ஒன்றிடம் தன்னை விற்று விட முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதுவும் சொதப்பிவிட்டது.
*(நன்றி: நாணயம் விகடன்)
Monday, October 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment