Saturday, November 29, 2008

மிதக்கிறது (புற நகர்) சென்னை...



சோழிங்கநல்லூர் அருகே கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடி இருப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.





கிரோம்பேட்டை பேருந்து நிலையம். மாலை 6:30 மணிக்கே இருட்டி கொண்டு மழை கொட்டியது.






சோழிங்கநல்லூர் விப்ரோ நிறுவனம் கட்டப்படும் இடும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

அஞ்சலி

மும்பை தீவிரவாதிகளை எதிர்த்து போராடி தம் இன்னுயிரை நீத்த ஹேமந்த் கர்கரே, மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், அசோக் கம்டே, மற்றும் பலருக்கும் பூச்சாண்டியின் வீர வணக்கங்களும் அஞ்சலியும். இவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.



Major Sandeep Unnikrishnan.



Ashok Kamte (Addl Commisioner)












Hemant Karkare (ATS Cheif)

உலகத்தில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதே இவர்களுக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலியாக இருக்க முடியும்.

இனியும் தாமதிக்காமல், தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கு மத்திய அரசு முன் வர வேண்டும். செய்யுமா?

Saturday, November 15, 2008

உலகம் சேமிக்க, அமெரிக்கா செலவழிக்க...

ஜப்பானியர்கள் அதிகமாக சேமிப்பார்கள். அதிகமாக செலவு செய்யமாட்டார்கள். மேலும் ஜப்பானின் ஏற்றுமதி அவர்கள் செய்யும் இறக்குமதியை விட அதிகம். அவர்களின் ஆண்டு வர்த்தகம் $100 பில்லியன்கள். இருந்தாலும் ஜப்பானின் பொருளாதாரம் வீக்குதான். கட்டடம் ஸ்ட்ராங் , பேஸ்மென்ட் வீக்குங்க்ற மாதிரி.

இதற்க்கு நேர்மாறாக அமெரிக்க பொருளாதாரம். அமெரிக்கர்கள் நிறைய செலவு செய்வார்கள் கொஞ்சமாக செமிப்பார்கள். அமெரிக்காவின் இறக்குமதி அதிகம், ஏற்றுமதி குறைவு. ஆண்டு வர்த்தகம் $400 பில்லியன். இருந்தாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் வலிமையாகவே கருதப்படுகின்றது.

அமெரிக்காவிற்கு செலவு செய்ய எங்கிருந்து பணம் கிடைக்கிறது? ஜப்பானிலிருந்தும் சீனாவிலிருந்தும் இந்தியாவிடமிருந்தும் பெரும் பணம்தான் இவை. சொல்லபோனால் மாற்ற நாட்டினர், அமெரிக்கா செலவு செய்வதற்காக சேமிக்கின்றனர். உலகத்தின் சேமிப்பு மொத்தம் அமெரிக்காவில் தான் முதலீடு செய்யப்படுகிறது.

இந்தியாவே அமெரிக்காவில் $100 பில்லியன் அளவுக்கு அந்நிய சொத்துகளாக (Foriegn Assets) குவித்துள்ளது. சீனா $160 பில்லியன். ஜப்பான் ட்ரில்லியன்களில்.
முடிவு: அமெரிக்கா இதுவரை $5 ட்ரில்லியன் ஏப்பம் விட்டுள்ளது. உலகம் சேமிக்க, அமெரிக்கர்கள் செலவு செய்கிறார்கள். இன்று அமெரிக்கா பொருளாதாரம் மீள நாடுகள் ஒவ்வொரு காலாண்டும் $180 பில்லியன்களை அழ வேண்டி இருக்கிறது. இல்லை என்றால் அமெரிக்கா பொருளாதாரம் வலுவிழந்துவிடும். அப்படியே உலக பொருளாதராமும். அமெரிக்கா சீனாவில் முதலீடு செய்ததைவிட சீனா அமெரிக்காவில் முதிலீடு செய்ததுதான் அதிகம். இந்தியா $50 பில்லியன் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவோ, இந்தியாவில் செய்துள்ள முதலீடு $20 பில்லியனுக்கும் கீழ்.

ஏன் உலகம் அமெரிக்க பொருளாதரத்தை சார்ந்துள்ளது? அமெரிக்கர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். எதிர்கால வருவாயை கருத்தில் கொண்டு அதிகமாக கடன் அட்டையை உபயோகிகீரார்கள். இந்த செலவினமே அதிகபடியான ஏற்றுமதிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது மற்ற நாடுகளுக்கு. முடிவு, உலகம், அமெரிக்காவின் பொருளாதரத்தை சார்ந்து இயங்க ஆரம்பித்து விட்டது. இதுவே அமேரிக்கா இயங்க மற்ற நாடுகள் முதலீடு செய்ய வழி வகுத்து விட்டது. இது எப்படி என்றால், கடைக்காரன் பொருள் வாங்குபவனுக்கு, பணம் அளித்து பொருள் வாங்க செய்வது போல். பணம் வழங்குவதை நிறுத்தி விட்டால், பொருள் வாங்க முடியாத நிலைமை. கடைகாரனுக்கு வியாபாரம் இல்லை. யார் அமெரிக்காவின் இத்தகைய கடைக்காரன்? ஆம். ஜப்பான் தான். இருந்தாலும் ஜப்பானின் பொருளாதாரம் பலகீனமாக கருதப்படுகிறது. இன்றைய பொருளாதார வல்லுனர்கள், ஜப்பானின் நுகர்வு திறன் குறைவாக உள்ளதனாலேயே அவர்களின் பொருளாதாரம் பலகீனமாக கருதபடுவதாக சொல்கிறார்கள்.

ஜப்பானியர்களின் சேமிப்பு மட்டும் $1.3 ட்ரில்லியன். இந்தியாவின் ஜி.டி.பியை போன்று மும்மடங்கு. ஒரு தேசத்தின் வளர்ச்சி அந்நாட்டின் நுகர்வு திறனை பொருத்தும் அமையும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

சேமித்தல் பாவம் செய்வதற்கு சமம் என்றாகிவிட்டது.

ஆகவே, சேமிப்பதை குறைத்து, செலவு செய்யுங்கள். அதற்கு முன் நீங்கள் செலவு செய்ய, ஒரு சேமிக்கும் முட்டாளை உங்கள் வசம் வைத்து கொள்வதும் நல்லது. ;-)