Saturday, November 15, 2008

உலகம் சேமிக்க, அமெரிக்கா செலவழிக்க...

ஜப்பானியர்கள் அதிகமாக சேமிப்பார்கள். அதிகமாக செலவு செய்யமாட்டார்கள். மேலும் ஜப்பானின் ஏற்றுமதி அவர்கள் செய்யும் இறக்குமதியை விட அதிகம். அவர்களின் ஆண்டு வர்த்தகம் $100 பில்லியன்கள். இருந்தாலும் ஜப்பானின் பொருளாதாரம் வீக்குதான். கட்டடம் ஸ்ட்ராங் , பேஸ்மென்ட் வீக்குங்க்ற மாதிரி.

இதற்க்கு நேர்மாறாக அமெரிக்க பொருளாதாரம். அமெரிக்கர்கள் நிறைய செலவு செய்வார்கள் கொஞ்சமாக செமிப்பார்கள். அமெரிக்காவின் இறக்குமதி அதிகம், ஏற்றுமதி குறைவு. ஆண்டு வர்த்தகம் $400 பில்லியன். இருந்தாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் வலிமையாகவே கருதப்படுகின்றது.

அமெரிக்காவிற்கு செலவு செய்ய எங்கிருந்து பணம் கிடைக்கிறது? ஜப்பானிலிருந்தும் சீனாவிலிருந்தும் இந்தியாவிடமிருந்தும் பெரும் பணம்தான் இவை. சொல்லபோனால் மாற்ற நாட்டினர், அமெரிக்கா செலவு செய்வதற்காக சேமிக்கின்றனர். உலகத்தின் சேமிப்பு மொத்தம் அமெரிக்காவில் தான் முதலீடு செய்யப்படுகிறது.

இந்தியாவே அமெரிக்காவில் $100 பில்லியன் அளவுக்கு அந்நிய சொத்துகளாக (Foriegn Assets) குவித்துள்ளது. சீனா $160 பில்லியன். ஜப்பான் ட்ரில்லியன்களில்.
முடிவு: அமெரிக்கா இதுவரை $5 ட்ரில்லியன் ஏப்பம் விட்டுள்ளது. உலகம் சேமிக்க, அமெரிக்கர்கள் செலவு செய்கிறார்கள். இன்று அமெரிக்கா பொருளாதாரம் மீள நாடுகள் ஒவ்வொரு காலாண்டும் $180 பில்லியன்களை அழ வேண்டி இருக்கிறது. இல்லை என்றால் அமெரிக்கா பொருளாதாரம் வலுவிழந்துவிடும். அப்படியே உலக பொருளாதராமும். அமெரிக்கா சீனாவில் முதலீடு செய்ததைவிட சீனா அமெரிக்காவில் முதிலீடு செய்ததுதான் அதிகம். இந்தியா $50 பில்லியன் அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவோ, இந்தியாவில் செய்துள்ள முதலீடு $20 பில்லியனுக்கும் கீழ்.

ஏன் உலகம் அமெரிக்க பொருளாதரத்தை சார்ந்துள்ளது? அமெரிக்கர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். எதிர்கால வருவாயை கருத்தில் கொண்டு அதிகமாக கடன் அட்டையை உபயோகிகீரார்கள். இந்த செலவினமே அதிகபடியான ஏற்றுமதிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது மற்ற நாடுகளுக்கு. முடிவு, உலகம், அமெரிக்காவின் பொருளாதரத்தை சார்ந்து இயங்க ஆரம்பித்து விட்டது. இதுவே அமேரிக்கா இயங்க மற்ற நாடுகள் முதலீடு செய்ய வழி வகுத்து விட்டது. இது எப்படி என்றால், கடைக்காரன் பொருள் வாங்குபவனுக்கு, பணம் அளித்து பொருள் வாங்க செய்வது போல். பணம் வழங்குவதை நிறுத்தி விட்டால், பொருள் வாங்க முடியாத நிலைமை. கடைகாரனுக்கு வியாபாரம் இல்லை. யார் அமெரிக்காவின் இத்தகைய கடைக்காரன்? ஆம். ஜப்பான் தான். இருந்தாலும் ஜப்பானின் பொருளாதாரம் பலகீனமாக கருதப்படுகிறது. இன்றைய பொருளாதார வல்லுனர்கள், ஜப்பானின் நுகர்வு திறன் குறைவாக உள்ளதனாலேயே அவர்களின் பொருளாதாரம் பலகீனமாக கருதபடுவதாக சொல்கிறார்கள்.

ஜப்பானியர்களின் சேமிப்பு மட்டும் $1.3 ட்ரில்லியன். இந்தியாவின் ஜி.டி.பியை போன்று மும்மடங்கு. ஒரு தேசத்தின் வளர்ச்சி அந்நாட்டின் நுகர்வு திறனை பொருத்தும் அமையும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.

சேமித்தல் பாவம் செய்வதற்கு சமம் என்றாகிவிட்டது.

ஆகவே, சேமிப்பதை குறைத்து, செலவு செய்யுங்கள். அதற்கு முன் நீங்கள் செலவு செய்ய, ஒரு சேமிக்கும் முட்டாளை உங்கள் வசம் வைத்து கொள்வதும் நல்லது. ;-)

6 comments:

யோசிப்பவர் said...

//சேமித்தல் பாவம் செய்வதற்கு சமம் என்றாகிவிட்டது.

ஆகவே, சேமிப்பதை குறைத்து, செலவு செய்யுங்கள். அதற்கு முன் நீங்கள் செலவு செய்ய, ஒரு சேமிக்கும் முட்டாளை உங்கள் வசம் வைத்து கொள்வதும் நல்லது. ;-) //

நச்!!;-))

பூச்சாண்டியார் said...

யோசிப்பவரே, வருகைக்கு நன்றி

குடுகுடுப்பை said...

ஆகவே, சேமிப்பதை குறைத்து, செலவு செய்யுங்கள். அதற்கு முன் நீங்கள் செலவு செய்ய, ஒரு சேமிக்கும் முட்டாளை உங்கள் வசம் வைத்து கொள்வதும் நல்லது. ;-)

உண்மை

ஆனால் நாம் அதிகம் சம்பாதிக்கவும் அதை நாமே செலவு பண்ணவும் வழி கண்டால் பொருளாதாரம் முன்னேறுமே. 100 கோடிக்கு மேல் நாம்.

பூச்சாண்டியார் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை.

சதுக்க பூதம் said...

உலக பொருளாதாரத்தில் ௪40 சதம் அமெரிக்கா வசம் உள்ளது.அதனால் அவர்களுக்கு கடன் கொடுத்தால் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை, கடன் கொடுக்கும் நாடுகளுக்கு உள்ளது.மேலும் உலக வணிக பொது கரன்சியாக டாலர் உள்ளது. அதனால் டாலரின் தேவை செயற்கையாக அதிகரிக்க பட்டுள்ளது. அது பற்றி ஒரு பதிவு எழுதி உள்ளேன். அதுவும் ஒரு முக்கிய காரணம் .
http://tamilfuser.blogspot.com/2007/09/blog-post.html

பூச்சாண்டியார் said...

வருகைக்கு நன்றி சதுக்க பூதம்

Post a Comment