இல்லை என்றால் எடுத்து கொள்ளவும்.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கம்பனியின் நிதி நிலைமையை காரணம் காட்டி உங்களை பணி நீக்கம் செய்தால் நீங்கள் எடுத்துள்ள இன்சூரன்ஸ் உங்களுக்கு கை கொடுக்கும்.
இந்த மாதிரி இன்சூரன்ஸ் பாலிசியில் சேர சில விதிமுறைகள் உள்ளன.
- உங்களின் ஆண்டு வருமானத்தை போல் 3 மடங்கு வரைக்கும் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
- மற்ற பாலிசியில் உள்ள அனைத்து சட்ட திட்டங்களும் இந்த வகையான பாலிசிகளுக்கும் பொருந்தும்.
- பாலிசிக்கான பிரிமியம் நீங்களோ அல்லது உங்கள் கம்பெனி 50% நீங்கள் 50% என்ற விகிதத்திலும் கட்டலாம்.
- இதற்கு வருமான வரி விலக்கும் உண்டு. (பிரிமியதிர்க்கு மட்டும்).
- நீங்கள் உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் நீங்களே பணியிலிருந்து ராஜினாமா செய்தால் இந்த இழப்பீடு இல்லை.
ஹிஹிஹிஹி.. இந்த மாதிரி குடுத்தா நல்லாத்தான் இருக்கும். இந்தியாவுல, ஏன் உலகத்துள்ள வேற எந்த நாட்லயாவது இந்த மாதிரி இருக்குமானு தெரியலை? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க..
இல்லைனா, நம்ம நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பரிந்துரை செய்யவும். அல்லது நீங்கள் இன்சூரன்ஸ் கம்பனியில் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் கம்பெனிக்கே பரிந்துரை செய்யவும். நல்ல லாபம் கிடைக்கும்.
:)
3 comments:
//இந்த மாதிரி குடுத்தா நல்லாத்தான் இருக்கும். இந்தியாவுல, ஏன் உலகத்துள்ள வேற எந்த நாட்லயாவது இந்த மாதிரி இருக்குமானு தெரியலை? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க..
//
http://www1.servicecanada.gc.ca/en/ei/menu/eihome.shtml
http://workforcesecurity.doleta.gov/unemploy/
நன்றி பழமைபேசி. :)
அடச்சே!! நான் கூட இப்படி இருக்கோன்னு 'நம்பி'டேன்!!
Post a Comment