Thursday, October 30, 2008

ஐ.டி மேல் ஏன் இந்த கொலை வெறி?

சில காலங்களாக ஐ.டி துறையினறை மைய படுத்தி செய்திகள் வருவதும், அதன் ஊழியர்களை இழிவு படுத்தி எழுதுவதும் அதிகரித்து கொண்டே போகிறது. இது சமூகத்தில் ஐ.டி ஊழியர்கள் என்றாலே இப்படி தான் என்று நினைக்க வைத்து விட்டது. எங்கோ ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் செய்த தவற்றால் இந்த ஐ.டி யில் உள்ளவர்களே இப்படித்தான் என்று எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏமையா, உமக்கு எல்லாம் இங்கே நடக்கும் நல்லவையே கண்களில் படாதா. இல்லை பட்டும் படாதது போல் இருக்கீறீர்களா?

எத்தனை ஐ.டி ஊழியர்கள், சமூக சிந்தனையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது உமக்கு தெரியுமா?

எத்தனை ஐ.டி ஊழியர்கள், ஏழை குழுந்தைகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உமது காதுகளுக்கு எட்டவில்லையா?

இன்னும் எத்தனை .டி நிறுவங்களே, இத்தகைய சமூக சிந்தனைகளை ஊக்குவித்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

எத்தனை ஐ.டி ஊழியர்கள் கிராமங்களில் இருந்து படித்து வந்து இன்று இந்தியாவின் பொருளாதரத்தை மேம்படுத்த வழி வகை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

அவ்வளவு ஏன், இங்கே சமூக சிந்தனையுடனும், பல்சுவைகளுடனும் இணையத்திலே, தமிழை நிலை நாட்டி கொண்டிருபவர்கள் தமிழ் பயின்ற ஐ.டி ஊழியர்களே அதிகம் என்பது உமக்கு தெரியாத ஒன்றா?

இதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் போவதற்கு உங்கள் கண்களில் என்ன மஞ்சள் காமாலையா?
இங்கே எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருகின்றன. அதை பற்றி எழுதுங்கள். அதை விடுத்து ஐ.டியினால் கலாச்சார சீரழிவு என்பது போல் ஒரு மாயையை உருவாக்காதீர்கள்.

அது என்ன?
நாட்டில் விலைவாசி உயர்வா? ஐ.டி தான் காரணம்.
வீட்டு வாடகை அதிகமா? ஐ.டி தான் காரணம்.
ஆட்டோக்காரன் ஆட்டோ வாடகை அதிகமாக கேட்டால்? ஐ.டி தான் காரணம்.

அத்தோடு நிற்காமல், இன்னும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், கடந்த வாரம், சென்னையில் ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டான் என் நண்பன்.
சரி இதை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க செல்லில் பேசிக்கொண்டிருந்த போது, பிடித்து விட்டார்கள் ட்ராபிக் போலீஸ் புண்ணியவான்கள். (கவனிக்க: கார் ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு விட்டது. கார் பத்து நிமிஷமாக நகரவில்லை). அவர்கள் இவனின் அனுமதி பெறாமல் வண்டியில் ஏறிக்கொண்டு "என்ன ஐ.டியா? எடு 1500 ரூபாய். பைன் கட்டு. இல்லை என்றால் எனக்கு 500 ரூபாய் கொடு. ஐ.டி தானே". இது எந்த வகையில் நியாயம்?

டிராபிக்கை ஒழுங்கு படுத்த வேண்டிய போலீஸ் காருக்குள் ஏறி லஞ்சம் கேட்பதை கேளுங்கள்.

நான் தெரியாமல் தான் இவர்களை பார்த்து கேட்கிறேன், நாட்டில் விலைவாசி உயர்ந்தால் யாரை கேட்கணும்? மளிகை கடைக்காரனிடம் கேளுங்கள் அல்லது நிதி அமைச்சரை கேளுங்கள். அதை விட்டுவிட்டு ஐ.டி என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?

வீட்டு வாடகையை உயர்த்தி கேட்கும் வீட்டுகாரர்களை கேளுங்கள். ஐ.டியை நோக்கி கை நீட்டுவது எந்த வகையில் நியாயம்?

சமூகத்தில் சீர்கேடு என்பது ஏதோ ஐ.டி வந்த பிறகு தான் நடப்பது போல் சித்தரிப்பது உச்சகட்ட கொடுமை. இதற்கு முன் இந்த நாட்டில் யாரும் குடிப்பது இல்லை என்பது போலவும், இப்பொழுதுதான் டாஸ்மாக் அதிகமாகிவிட்டது போலவும் கொக்கரித்து கொண்டு இருக்கிறார்கள்.

நாட்டில் விபச்சாரம் இன்னும் சில இத்யாதிகளையும் இப்போதுதான் இவர்கள் கேள்விபடுகிற மாதிரி எழுதுவதெல்லாம் ரொம்ப டூ மச் ரகம்.

உங்களுக்கு எல்லாம் அப்படி என்னதான் இந்த ஐ.டி மேல் அப்படி ஒரு காண்டு?!!!

Tuesday, October 28, 2008

உங்கள் வேலைக்கு இன்சூரன்ஸ் எடுத்துடீங்களா?

உங்கள் வேலைக்கு இன்சூரன்ஸ் எடுத்துடீங்களா?
இல்லை என்றால் எடுத்து கொள்ளவும்.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கம்பனியின் நிதி நிலைமையை காரணம் காட்டி உங்களை பணி நீக்கம் செய்தால் நீங்கள் எடுத்துள்ள இன்சூரன்ஸ் உங்களுக்கு கை கொடுக்கும்.
இந்த மாதிரி இன்சூரன்ஸ் பாலிசியில் சேர சில விதிமுறைகள் உள்ளன.
  1. உங்களின் ஆண்டு வருமானத்தை போல் 3 மடங்கு வரைக்கும் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
  2. மற்ற பாலிசியில் உள்ள அனைத்து சட்ட திட்டங்களும் இந்த வகையான பாலிசிகளுக்கும் பொருந்தும்.
  3. பாலிசிக்கான பிரிமியம் நீங்களோ அல்லது உங்கள் கம்பெனி 50% நீங்கள் 50% என்ற விகிதத்திலும் கட்டலாம்.
  4. இதற்கு வருமான வரி விலக்கும் உண்டு. (பிரிமியதிர்க்கு மட்டும்).
  5. நீங்கள் உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் நீங்களே பணியிலிருந்து ராஜினாமா செய்தால் இந்த இழப்பீடு இல்லை.
சரி, எந்த இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த மாதிரி பாலிசிக்களை வழங்குகிறதுன்னு கேட்கறீங்களா?

ஹிஹிஹிஹி.. இந்த மாதிரி குடுத்தா நல்லாத்தான் இருக்கும். இந்தியாவுல, ஏன் உலகத்துள்ள வேற எந்த நாட்லயாவது இந்த மாதிரி இருக்குமானு தெரியலை? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க..

இல்லைனா, நம்ம நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு பரிந்துரை செய்யவும். அல்லது நீங்கள் இன்சூரன்ஸ் கம்பனியில் வேலை செய்பவராக இருந்தால் உங்கள் கம்பெனிக்கே பரிந்துரை செய்யவும். நல்ல லாபம் கிடைக்கும்.

:)

Saturday, October 25, 2008

எங்கே செல்லும் இந்த பாதை...

காட்சி 1:
இடம்
: ஆர்.டி. அலுவலகம் நேரம்: காலை மணி 10:00

ராமு ஏற்கனவே இரண்டு சக்கர வாகனத்திற்கும் நான்கு சக்கர வாகனத்திற்கும் லைசென்ஸ் எடுக்க LLR வாங்கி வைத்து இருந்தான். இன்று லைசென்ஸ் வாங்கி விட வேண்டும். அதற்காக இன்று வண்டியை Break Inspector முன்னாடி 8 போட்டு காட்டி, அப்படியே காரையும் ஓட்டி காட்ட வேண்டும்.

அன்றைய தினத்தில் மொத்தம் 37 பேர் பதிவு செய்திருந்தார்கள். இவன் 12வது ஆளாக பதிவு செய்திருந்தான். அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு மரத்தடியில் காத்திருந்தான். மணி 11:15 Break Inspector வந்தார். கூடவே ஒரு கைத்தடியும் வந்தான். அவன் ஒவ்வொரு பெயராக படிக்க, அவர்கள் எடுத்து வந்திருந்த வண்டியை ஓட்டி காண்பித்தார்கள். ராமுவும் தான் கொண்டு வந்திருந்த வண்டியை ஓட்டி கண்பித்தான். அடுத்தவர்கள் அடுத்தவர்கள் என்று 37 பேரும் ஓட்டி முடித்தார்கள். Break Inspector யாருக்கும் எந்த முடிவையும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றுவிட்டார். அந்த கைத்தடியும் உள்ளே சென்று சற்று நேரம் கழித்து வெளியில் வந்தான். விண்ணப்பிதவர்களை ஒவ்வொருவராக Break Inspector இருந்த அறை உள்ளே அனுப்பினான். ராமுவும் தனது சுற்று வந்த போது உள்ளே சென்றான். அந்த பிரேக் இன்ஸ்பெக்டர் அவனது விண்ணப்பதை பார்த்து,

வாயா.. நீ நல்லாத்தான் வண்டி ஓட்டறே...
சரி, ஒரு 1000 ரூபாய் எடு. உனக்கு இப்பவே டூவீலர் போர்விளர் லைசென்ஸ் தர சொல்றேன். ராமுவிற்கு ஒன்றும் புரியவில்லை.

சார், நான் தான் நல்ல ஒட்றேன்னு சொன்னிங்களே.

தம்பி, இங்க பாரு, நான் ஒரு நாளைக்கு 17 பேருக்கு தான் லைசென்ஸ் தர முடியும். இன்னிக்கின்னு பார்த்து 35 பேரு வந்திருக்கீங்க. என்ன பண்ண சொல்ற..

சார், நான் டிரைவர் ஆகி தான் என் குடும்பத்த காப்பத்தனும். என்கிட்ட அவ்ளோ பணம் இல்ல..

இங்க பாரு, பணம் இருந்த லைசென்ஸ்.. இல்லனா கிளம்பு.

காட்சி 2:
இடம்: மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகம்.
நேரம்
: காலை 11:00 மணி.

சோமு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்பிப்பதர்க்காக அவன் இங்கு வந்திருக்கிறான். இவன் இந்த வருடம் தான் B.E படித்து முடித்தான். அந்த விண்ணப்பத்தில் சில இடங்களில், சந்தேகம் இருந்ததால் அவைகளை நிரப்பாமால் கையில் வைத்து இருந்தான். அங்கே விண்ணப்பத்தை பெற்று கொள்ளும் அதிகாரியிடம் சென்று,
சார், எனக்கு இந்த அப்ளிகேசனில் கொஞ்ச எடுத்துள்ள என்ன பில் பண்றதுன்னு தெரியல. கொஞ்சம் சொல்றீங்களா?

என்ன படிச்சிருக்கே?

சார், B.E.

B.E. படிச்சிருக்கே இந்த அப்ளிகேசன பில் பண்ண தெரியல?

இதல கொஞ்ச டெர்ம்ஸ் புதுசா இருக்கு அதான்.

இங்க பாரு, உனக்கு பதில் சொல்லறதுக்கு எல்லாம் எனக்கு சம்பளம் கொடுக்கல. ஒரு 500 ரூபாய குடு. பக்கத்துல ஒரு பய்யன வேலைக்கு வச்சி இருக்கேன். அவன் பில் பண்ணி கொடுப்பான்.


இதெல்லாம், எந்த நாடகத்திலோ, சினிமாவிலோ வரும் காட்சிகள் அல்ல. எந்த கதையிலும் அல்ல. அத்தனையும் நம் நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் நடக்கிற அப்பட்டமான உண்மை. எங்கும் லஞ்சம். எதிலும் லஞ்சம்.

ஒரு நாளைக்கு ஒருவரிடம் இருந்து 1000 ரூபாய் என்றால், 35 பேருக்கு எவ்வளவு, ஒரு நாளைக்கு எவ்வளவு, ஒரு மாதத்திற்கு எவ்வளவு, ஒரு வருடத்திற்கு எவ்வளவு? கணக்கு போட்டு பார்த்தால் தலையே சுற்றுகிறது. இந்த காசெல்லாம் கருப்பு பணமாகிறது. இந்தியப் பொருளாதாரம் இங்கே கொஞ்சம் கொஞ்சமாக செல் அரிக்கப்படுகிறது. இவை மட்டுமா, உங்களிடம் வரும் எத்தகைய மக்களையும் மதிப்பதும் இல்லை. அனைவருக்கும் விளங்கும்படி சொன்னால், உங்கள் சேவையில் customer satisfaction என்பது ஏட்டளவில் கூட இல்லை. லஞ்சம் வாங்கும் உங்களிடம் எப்படி இதை எதிர்பார்க்க முடியும்?

லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களே, சற்றே எண்ணி பாருங்கள். உங்களுக்கு மக்கள் எழுதும் விண்ணப்ப படிவங்களிலோ அல்லது கடிதங்களிலோ எப்படி எழுதுகிறார்கள் தெரியுமா?

மதிப்பிற்குரிய ஐயா,
........................................................................................
......................................................................................................................
......................................................................................................................
தாங்கள் ஆவன செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
...................................................

வார்த்தைகளை கவனியுங்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதையை பாருங்கள். மக்களின் பணிவை பாருங்கள். மக்களின் பணத்தை பார்க்காதீர்கள்.
மக்களுக்கு சேவை செய்யவே உங்களை அரசாங்கம் பணி அமர்திவுள்ளது. மக்களிடம் லஞ்சம் வாங்குவதர்க்கல்ல.

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்.. " என்று பாடி வைத்தான் பாரதி..
"என்று ஒழியும் இந்த லஞ்சம்.. " என்று மக்களை பாட வைத்து விட்டீர்கள்.

எங்கே செல்லும் இந்த பாதை...

ஆவதும் உங்களாலே, நாடு
ஆழிவதும் உங்களாலே..

Wednesday, October 22, 2008

தீபாவளியை கொண்டாடுங்கள்!!!

இந்த பதிவுலகத்தில் சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. அதில் தமிழர்கள் தீபாவளியை கொண்டாடலாமா? தீபாவளி ஆரியர்களின் பண்டிகை. திராவிடர்களாகிய நாம் இதை கொண்டாடலமா? இது ஒரு மூடநம்பிக்கை. இப்படி பல.

ஐயா கணவாண்களே, இன்னும் ஏன் உங்களுக்கு இந்த பிரிவினை வாதம்? திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பார்பாணியர்கள் என்றும்? அன்று யாரோ செய்த தவறை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல போகீறிர்கள்?

இன்னும் சொல்ல போனால் இத்தகைய ஆராய்ச்சியே தேவையற்றது. சிறுவர்கள், பெரியவர்கள், உற்றார்கள், உறவினர்கள் கூடி சந்தோஷமாக கொண்டாடுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உங்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் நாளாக எண்ணி கொண்டாடுங்கள். இதில் மூட நம்பிக்கை ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன். விழாக்களும் பண்டிகைகளும் இல்லை என்றால் இந்த வாழ்க்கை முறையில் நீங்கள் நிறைய உறவினர்களையும், நண்பர்களையும் இழக்க நேரிடும். ஏன் அப்படி உறவே இருப்பது உங்களுக்கு மறந்து கூட போகும். நினைத்து பாருங்கள், உங்கள் தாத்தா பாட்டியோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கு தெரிந்த அத்தனை சொந்தகளும் உங்களுக்கும் தெரியுமா? அதற்காகவே நம் முன்னோர்கள் இத்தகைய பண்டிகைகளையும், திருவிழாக்களையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

தமிழால் ஒன்றுபட்டு, இந்தியனாக வாழ்ந்து, உலக மேன்மைக்காக பாடுபடுவோம். தீபாவளியை மட்டுமல்ல அனைத்து நாட்களையும் கொண்டாடுங்கள். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். உலகத்தில் அமைதி நிலவட்டும். உலக பொருளாதாரம் தொய்வில் இருந்து மீண்டு முன்னேற்றமடயட்டும். ஈழத்தில் அமைதி திரும்பட்டும்.

பூச்சாண்டியாரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Tuesday, October 21, 2008

சோதனை பதிவு

தமிழ் மணம்: சோதனை பதிவு

Monday, October 20, 2008

சினிமா சினிமா சினிமா.. (தொடர் பதிவு)

இந்த தொடர் பதிவிற்கு அழைத்த சவுண்டு பார்ட்டி உதய்க்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
சற்றேரக்குறைய பத்து வயதில் இருந்து என்று நினைக்கிறேன். நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் அபூர்வ சகோதரர்கள். எங்கள் ஊரில் இருந்த முருகன் தியேட்டரில் பார்த்ததாக நினைவு. நான் சின்ன வயதில் தியேட்டருக்கு சென்று பார்த்த படங்கள் மிகவும் குறைவே. கல்லூரியில் படிக்கும்போது கூட கட் அடித்து படத்திற்கு சென்று குறைவுதான். அந்த அளவுக்கு நல்லவன்னு சொல்லுவாங்க. எனது நண்பர்கள் கட் அடித்து படத்திற்கு செல்லும் போது எனது ரெகார்ட் நோட்டை எடுத்துக்கொண்டு நீ வராவிட்டால் இதை தியேட்டரில் போட்டு விட்டு வந்திடுவோம்னு சொல்லி மிரட்டி கூப்பிட்டு போய்விடுவார்கள். அப்படி சென்று பார்த்த படம் ரெட், பாபா, தீனா, பாய்ஸ் இன்னும் சில. அங்கே சென்று விசில் அடித்து கத்தி கலாட்டா செய்தது எல்லாம் ஒரு சரித்திரம். இதையெல்லாம் இப்போது நினைத்து பார்த்து நண்பர்கள் பேசி சிரித்துகொல்வதும் உண்டு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
சரோஜா.. நானும் எனது நண்பனும் மாயஜாலில் சென்று பார்த்தோம். படம் நன்றாக உள்ளது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஆர்யா. பரவாயில்லை ரகம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
கற்றது தமிழ். நல்ல கதை. ஜீவாவின் நடிப்பும் அற்புதம். ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல படத்தை பார்த்த ஒரு திருப்தி. என்னை ரொம்பவும் பாதித்த படம்.

இன்னொரு படம் உண்டு. தாம் தூம். இப்படி எல்லாம் படம் கூட படம் எடுப்பார்களா?? அரங்கிற்குள் உட்கார முடியவில்லை. எனது நண்பன் ஒருவன் தூங்கிவிட்டான்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
உளியின் ஓசை. உடன் பிறப்புகளுடன் கலைஞர் டிவி மற்றும் சிலர் அடித்த லூட்டிகளையும் மறக்கமுடியவில்லை.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
சிவாஜி. ஒரு கூடை சன் லைட் பாட்டில் ரஜினியின் மேக்கப் கிராபிக்ஸ்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
தேடி சென்று படிப்பதில்லை. கண்ணில் பட்டால் விடுவதில்லை.

7. தமிழ்ச்சினிமா இசை?
மெல்லிசை மன்னர், இசைஞானி இவர்களின் இசை காலத்தால் அழியாதவை. இன்றும் கேட்கும்போது ரசிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ் சினிமாவின் இசை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில் இப்பொழுது உள்ள இசை அமைப்பாளர்கள் மிக சிறப்பாக செய்துகொண்டு இருக்கிறார்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஹிந்தியில் சர்கார், ரங் தே பசந்தி.
ஆங்கிலத்தில் ஹோம் அலோன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடி தொடர்பு என்று எதுவுமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நன்றாகவே இருக்கும். நல்ல இயக்குனர்கள் இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் என்று தினமும் வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
மற்றவை இல்லை என்றால் பறவா இல்லை. ஆனால் இணையம் இல்லை என்றால் உலகமே ஸ்தம்பித்து விடும். நினைத்து பாருங்கள்.

இந்த ஆட்டத்தை தொடர நான் அழைப்பவர்கள்:
புகழன்
இம்சை அரசி
ராஜா





Saturday, October 18, 2008

கேலி சித்திரங்கள்!!!










(நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா)

Friday, October 17, 2008

உங்கள் பாஸ் எதிரில் என்ன பாட்டு பாடலாம்?

உங்கள் பாஸ் நல்லவராக இருந்தால்:
1. எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெப்போம்..
2. அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவரே..
3. ஒளிமயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..

உங்கள் ஆப்புரைசல் நல்லபடியாக வந்தால்:
1. ஒளிமயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது..
2. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி கொடுக்கும்போது வள்ளல் ஆகலாம்.

உங்கள் அப்புரைசலில் ஆப்பு வைத்தால்:
1. என்கிட்டே மோதாதே நான் ராஜாதி ராஜனடா..
2. நான் பொல்லாதவன், பொய் சொல்லாதவன்...
3. என் கதை முடியும் நேரமிது..
4. புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை...
5. எங்கே செல்லும் இந்த பாதை..
6. போடா போடா புண்ணாக்கு, போடாத தப்பு கணக்கு..
7. உன்குற்றமா என் குற்றமா யார நானும் குற்றம் சொல்ல..

சம்பளம் போதவில்லை என்றால்:
1. வரவு எட்டணா, செலவு பத்தணா..
2. நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க..
நான் ஒரு முட்டாளுங்க.. (இன்னும் இந்த வேளையில் இருப்பதால்...)

பாஸ் சூப்பர் பிஃகரா இருந்தால்:
1. உனக்காக தானே இந்த உயிர் உள்ளது, உன் துயரம் தாங்க என் தோள் உள்ளது..
2. கங்கைக்கரை தோட்டம், கண்ணி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே...

டார்ச்சர் செய்பவராக இருந்தால்:
1. வாராய் நீ வாராய், போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்.. (அப்படியே கூட்டி சென்று மொட்டை மாடியில் இருந்து தள்ளி விடலாம்).
2. எங்க ஏரியா உள்ள வராதே..
3. உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா..
4. ரம்பம் பம் ஆரம்பம், ரம்பம் பம் பெரும் துன்பம்..
5. ஏன் பிறந்தாய் மகனே.. ஏன் பிறந்தாய்??

உங்களுக்கு தெரிந்ததை, நீங்கள் இங்கே பின்னூட்டமாக சொல்லலாம்.. :)

Wednesday, October 15, 2008

ஐ.டி. ஊழியர்களுக்கு மேலும் சிக்கல்???!!!

பொருளாதார மந்த நிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஐ.டி துறையினரை நிறையவே பாதித்துள்ளது, குறிப்பாக கல்யாணமாகாத இளைஞர்களை.

ஒருபக்கம் வேலை இழப்பு, மறுபக்கம் பெண்களை பெற்ற பெற்றோர்கள் ஐ.டி வரணை வேண்டாம் என்கிறார்களாம். காரணம், உலக பொருளாதார மந்த நிலை, ஐ.டி துறையில் ஏற்பட்டிருக்கும் தொய்வு நிலை என்றால் அது மிகை அல்ல.

மேலும் விவரங்கள் இங்கே.

ஐ.டி நண்பர்களே, வெட்டிப்பயல் நமக்காக தந்துள்ள சில டிப்ஸ் படித்து பயன் பெறவும்.

கண்ணத் தொறக்கணும் சாமி, கட்சி தொடங்கணும் சாமி.

















இன்றைய தினமலரில் வெளி வந்துள்ள கார்ட்டூன்.

Tuesday, October 14, 2008

ரஜினி காந்த் மீண்டும் சொதப்பல்

ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா? நேற்று ரஜினி காந்த் விடுத்துள்ள அறிகையில் இதற்கான பதில் எதுவும் சொல்லாமல் மறுபடியும் சொதப்பியுள்ளார்.

"அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது".

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) செயல்பாடுகள் மற்றும் அதன் பணிகள் காமிக்ஸ் புத்தக வடிவில் வழங்கபட்டுள்ளது. அதை பதிவிரக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்.

Monday, October 13, 2008

அமெரிக்க வங்கிகளுக்கு நடந்தது என்ன?

கம்பன் அமெரிக்காவில் பிறந்திருந்து ராமாயணம் எழுதியிருந்தால் 'கடன் கொடுத்தார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று தான் எழுதி இருப்பான். அந்த அளவுக்கு கடன் கொடுத்துவிட்டு வசூலிக்க வழி தெரியாமல் கலங்கி நிற்கின்றன அமெரிக்க வங்கிகள்.

கடன் வாங்குவது கௌரவ குறைச்சல் என்பது நமக்குதான். அமெரிக்காவில் இது ரொம்ப சாதாரணம். அங்குள்ள வங்கிகள், நிதி நிறுவங்களின் கொள்கையே அத்தனை பேரையும் கடனாளி ஆக்க வேண்டும் என்பதுதான். அதனாலதான் விதவிதமான கடன்களை அள்ளிகொடுத்தன. அதில் அமெரிக்காவையே விழ்த்திய பிரமாஸ்திரம் வீட்டு கடன் தான்.

வீடு வாங்க கடன் கொடுத்தது தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்கு கொடுக்காதது தான் இந்த நிலைக்கு காரணம். அமெரிக்காவில், ஒரு வீடு வாங்க வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ளது போல் நேரடியாக வங்கியில் கடன் பெற முடியாது. மார்ட்கேஜ் நிறுவனங்களில் தான் வாங்க முடியும்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட பிறகு 2002-ல் அங்கு மர்த்கஜ் கடன்கள் மீதான வட்டி விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டன. இதனால் குறைந்த வருமானம் உள்ளவர்களும் வீட்டு கடன் பெற முடிந்தது. அதனால் மார்ட்கேஜ் நிறுவனங்கள் கூவிக்கூவி கடன் கொடுத்தன. கடன்பெறவே தகுதி இல்லாதவர்கள், திருப்பி செலுத்த முடியாதவர்கள், இரண்டாவது வீடு வாங்குபவர்கள் என்று வந்தவர் போனவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்தனர். இதனால் கடனை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து.

மார்ட்கேஜ் நிறுவனங்கள் இந்த கடன்களை வேறு நிதி நிறுவங்களுக்கு விற்றன. இந்த நிறுவங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் இழப்பீடு தருவதாக சொல்லி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி கொடுத்தன. இப்படி ஒரு கடனுக்கு பலரும் பங்காளிகளாக வந்தனர்.

இதற்கிடையில் ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சி அடைய துவங்கியது. இதனால் வீட்டு கடனுக்கு செலுத்தவேண்டிய மாத தவணை (EMI) அதிகமானது. கடன் வங்கியவர்களால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. அதே சமயம் வீடுகளின் மதிப்பு சர்ரென குறைந்தது. கடனுக்கு பதில் வீட்டை எடுத்துக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ள பட்டன வங்கிகள். ஆக, வீட்டு கடனை வாங்கியவர் திருப்பி செலுத்த முடியாமல் போன போது எல்லோரும் சிக்கி கொண்டனர்.

யாரெல்லாம் பாதிக்க பட்டார்கள்:
பியர் ஸ்டர்ன்ஸ்/பேனி மே/பிரெடி மேக்:
முதன்முதலில் இந்த சிக்கலில் மாட்டி வெளிவந்தது பியர் ஸ்டர்ன்ஸ் நிறுவனம் தான். இதன் இரண்டு மிகப்பெரிய ஹெட்ஜ் பண்டு திட்டங்களுக்கு மதிப்பில்லாமல் போனது. இந் நிறுவன பங்கின் 52 வார அதிகபட்ச விலை 133.20 டாலர். ஆனால், இந்த பிரிச்சனையால் 10 டாலர்களுக்கு கேட்கப்பட்டது. J.P. morgan சேல்ஸ் வங்கி ஒரு பங்கு 10 டாலர் என்ற மதிப்பில் இந்நிறுவனத்தை வாங்கியது.

அமெரிக்காவின் பெடெரல் வங்கியும், இங்கிலாந்தின் மத்திய வங்கியும் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து, தற்காலிகமாக நிலைமையை சமாளித்தன. அதன் பிறகு அமெரிக்காவின் ஹௌசிங் பினான்ஸ் நிருவன்களான பேனி மே, பிரெடி மேக் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இவை இரண்டும் தான் அமெரிக்காவின் அறுபது சதவிகித மார்ட்கேஜ் கடன்களை வழங்கிஇருந்தன. இதனை பெடெரல் ரிசர்வ் தத்து எடுத்துகொண்டது.

லேமன்/மேரில் லின்ச்:
இதுவரை நடந்ததெல்லாம் ஆரம்பம்தான் இனிதான் உச்சகட்டமே என்பது போல 158 வருட பாரம்பரியம் மிக்க முதலீட்டு வங்கியான 'லேமன் பிரதர்ஸ்' திவாலானது. இவங்கி, வீடுகள், வணிக வளாகங்களில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்க ஹௌசிங் சந்தையின் விழ்ச்சியால் இவ்வங்கி கொடுத்த மருகடன்கள் மற்றும் அதன் சொத்துகளின் மதிப்பு அடிமட்டத்துக்கு போனது. அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் திவாலானது.

அதே நாளில் உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான மெரில் லின்ச் தனது இயலாமையை அறிவித்தது. இதனை பேங்க் ஆப் அமெரிக்க எடுத்துக்கொள்வதாக அறிவித்தால் மெரில் லின்ச் மானம் காப்பாற்ற பட்டது.

..ஜி:
அமெரிக்காவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் இது. மார்ட்கேஜ் கடன்களுக்கு கொடுத்த நிதிக்கான காப்பீட்டை வழங்கியது இந்நிறுவனம்தான். 85 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டு திவாலாக இருந்தது. அந்த தொகையை கடனுதவியாக அமெரிக்காவின் பெடெரல் ரிசர்வ் வழங்கி காப்பற்றி உள்ளது. மேலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் 79.9 சதவிகித பங்குகள் பெடெரல் ரிசர்வ் எடுத்துக் கொண்டுள்ளது.

வாஷிங்டன் மீயுசுவல்/வாகோவியா
சரியாக 119 வருட அனுபவமுள்ள வங்கித்துறை நிறுவனம் வாஷிங்டன் மீயுசுவல் நிறுவனம். இதுவும் தான் திவாலாகப் போகும் நிலையில் உள்ளதை அமெரிக்காவிடம் பதிவு செய்துள்ளது. இது வழங்கியுள்ள மார்ட்கேஜ் கடன்கள் மூலம் சுமார் 19 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வங்கி லேமனுக்கு அடுத்து பெரிய அளவில் பாதித்துள்ள வங்கி. இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் ஆறாவது பெரிய வங்கியான வாகூவியவும் தப்பவில்லை. இந்த வங்கியும் யாராவது வாங்க முன் வருவார்களா என காத்திருக்கிறது.

இப்படி திவால் நிறுவனங்களுக்கு மட்டுமே உதவி செய்ய மீட்பு தொகையாக 700 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு ஒதிக்கீடு செய்து உள்ளது. புதிராக தொடரும் இந்த கதை எங்குபோய் முடியும் என்றே தெரியவில்லை.

முதல் செங்கல்:
அமெரிக்காவை சேர்ந்த 158 வருட பாரம்பரியம் மிக்க லேமன் பிரதர்ஸ் வங்கியின் அஸ்திவாரம் நொரிங்கிபோனது கடந்த செப்டம்பர் 14 என்றாலும், அதன் முதல் செங்கல் 2002-ஆம் ஆண்டிலேயே உருவபட்டுவிட்டது.
2001 செப்டேமேபேர் 11-ல் உலக வர்த்தக மையம் இரட்டை கோபுரம் தகர்கபட்டபோது, அந்தக் கட்டடத்தின் மூன்று தளங்களை கையில் வைத்து இருந்தது லேமன் வங்கி. இர்ரடை கோபுரம் தகர்கபட்டதும், அதன் தொடர்ச்சியாக 2002-ல் அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் மதிப்பு சரியா ஆரம்பித்தது. பிறகு சப் ப்ரீம் மார்ட்கேஜ் விவகாரம் எழ, அதன் விளைவாகவே லேமன் வங்கி பலியாகி போனது.

கடைசி நிமிடங்கள்:
அமெரிக்காவின் டிரஷரி செக்ரடரியான ஹென்றி எம். பால்சன் ஜுனியரும், பெடெரல் ரிசர்வ் அதிகாரிகளும், லேமன் பிரதர்ஸ் வங்கியை வாங்கலாம். அதை திவாலாக விடவேண்டாம் என்று ஆலோசனை சொன்னபோது யாரும் வாயே திறக்கவில்லை. அமெரிக்காவின் நான்காவது பெரிய நிதி நிறுவனமான இந்த வங்கியை வாங்குவதற்கு தகுதியான பார்க்லேஸ் வங்கியும் பேங்க் ஆப் அமெரிகாவும்குட, 'இந்த டீல் வேலைக்கு ஆகாது' என்கிற ரேஞ்சில் சைலேண்டக இருந்துவிட்டது... கடைசி முயற்சியாக லேமன் வங்கி அதன் பங்குக்கு கொரிய நிதி நிறுவனம் ஒன்றிடம் தன்னை விற்று விட முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதுவும் சொதப்பிவிட்டது.

*(நன்றி: நாணயம் விகடன்)

100 = 6

100 = 6 .
நீங்கள் நம்புவீங்களா?
எவ்ளோவோ பண்ணிடோம். இத பண்ண மாட்டோமா?
இங்கே நிருபித்து காட்டி இருக்கேன்.

let a = b

இரண்டு பக்கமும் 94 பெருக்கவும்.

94a = 94b

(100 - 6)a = (100-6) b

100a - 6a = 100b - 6b

100a - 100b = 6a -6b

100(a-b) = 6(a-b)

ரெண்டு பக்கமும் (a-b) தூக்கிட்டா

100 = 6.

Saturday, October 11, 2008

எனக்கும் இடம் உண்டு

வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே..

இதோ வந்துட்டேன்.. ஆமாங்க.. எனக்கும் ரொம்ப நாளா பிளாக் எழுதனும்னு.. இப்பதான் சந்தர்பம் கெடச்சது... வந்தாச்சு.. சோ, மக்களே எனக்கும் உங்களுடைய ஆதரவும் தேவைங்கோ..

நானும் நிறைய பிளாக் படிப்பேன்.. சற்றேரக்குறைய இருண்டு வருஷத்துக்குமுன்னாலே இருந்து தான் இந்த கெட்ட பழக்கம். முன்ன எல்லாம் தனி தனியாஅந்த ப்ளாக்குகே போய் படிக்கணும். இப்ப RSS பீட்ஸ் வந்துடிச்சி. அதனாலகூகிள் ரீடேர் ரொம்ப ஈஸ்யா படிக்கமுடியுது. நான் தவறாமல் படிப்பது பக்கதுல இருக்கு. நீங்களும் படிச்சு அனுபவிங்கோ.