இந்த பதிவுலகத்தில் சில பதிவுகளை படிக்க நேர்ந்தது. அதில் தமிழர்கள் தீபாவளியை கொண்டாடலாமா? தீபாவளி ஆரியர்களின் பண்டிகை. திராவிடர்களாகிய நாம் இதை கொண்டாடலமா? இது ஒரு மூடநம்பிக்கை. இப்படி பல.
ஐயா கணவாண்களே, இன்னும் ஏன் உங்களுக்கு இந்த பிரிவினை வாதம்? திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பார்பாணியர்கள் என்றும்? அன்று யாரோ செய்த தவறை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல போகீறிர்கள்?
இன்னும் சொல்ல போனால் இத்தகைய ஆராய்ச்சியே தேவையற்றது. சிறுவர்கள், பெரியவர்கள், உற்றார்கள், உறவினர்கள் கூடி சந்தோஷமாக கொண்டாடுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உங்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் நாளாக எண்ணி கொண்டாடுங்கள். இதில் மூட நம்பிக்கை ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன். விழாக்களும் பண்டிகைகளும் இல்லை என்றால் இந்த வாழ்க்கை முறையில் நீங்கள் நிறைய உறவினர்களையும், நண்பர்களையும் இழக்க நேரிடும். ஏன் அப்படி உறவே இருப்பது உங்களுக்கு மறந்து கூட போகும். நினைத்து பாருங்கள், உங்கள் தாத்தா பாட்டியோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கு தெரிந்த அத்தனை சொந்தகளும் உங்களுக்கும் தெரியுமா? அதற்காகவே நம் முன்னோர்கள் இத்தகைய பண்டிகைகளையும், திருவிழாக்களையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
தமிழால் ஒன்றுபட்டு, இந்தியனாக வாழ்ந்து, உலக மேன்மைக்காக பாடுபடுவோம். தீபாவளியை மட்டுமல்ல அனைத்து நாட்களையும் கொண்டாடுங்கள். உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். உலகத்தில் அமைதி நிலவட்டும். உலக பொருளாதாரம் தொய்வில் இருந்து மீண்டு முன்னேற்றமடயட்டும். ஈழத்தில் அமைதி திரும்பட்டும்.
பூச்சாண்டியாரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Wednesday, October 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அட நீங்க வேற , நாங்க எல்லாம் திராவிடர்கள், ஆரிய பண்டிகையான தீபாவளியை கொண்டாட மாட்டோம்.
ஆனால் பார்ப்பன நடிகைகள் ஆன பிரியா மணி, த்ரிஷா, நமீதா பேட்டிகள் மட்டும் பார்ப்போம்.
பெரியார் வழி வந்த நாங்கள் (கலைஞர் டிவி) எங்கள் நிகழ்ச்சிக்கு மட்டும் பார்ப்பன நடிகைகள் (ரம்பா, சின்மயி) போன்றோரை பயன் படுத்துவோம்.
மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சிக்கு புஸ்பவனம் குப்புசாம்யும் , கண்மணி சுப்புவும் வைத்து நடத்த நாங்கள் என்ன மாங்கா மடையர்களா.
குப்பன்_யாஹூ
கலக்கிட்டீங்க பூச்சாண்டியார்.தீபாவளி நல் வாழ்த்துக்கள்
குப்பன்_யாஹூ:
நல்ல கொள்கை.. வருகைக்கு நன்றி..
வருங்கால முதல்வர் அவர்களே.. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.. உங்கள் வரவு நல்வரவாகுக..
//பூச்சாண்டியாரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள். //
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள் !
நன்றி கோவி.கண்ணன்..
wish u a happy diwali
:)
Post a Comment