சில காலங்களாக ஐ.டி துறையினறை மைய படுத்தி செய்திகள் வருவதும், அதன் ஊழியர்களை இழிவு படுத்தி எழுதுவதும் அதிகரித்து கொண்டே போகிறது. இது சமூகத்தில் ஐ.டி ஊழியர்கள் என்றாலே இப்படி தான் என்று நினைக்க வைத்து விட்டது. எங்கோ ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் செய்த தவற்றால் இந்த ஐ.டி யில் உள்ளவர்களே இப்படித்தான் என்று எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஏமையா, உமக்கு எல்லாம் இங்கே நடக்கும் நல்லவையே கண்களில் படாதா. இல்லை பட்டும் படாதது போல் இருக்கீறீர்களா?
எத்தனை ஐ.டி ஊழியர்கள், சமூக சிந்தனையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது உமக்கு தெரியுமா?
எத்தனை ஐ.டி ஊழியர்கள், ஏழை குழுந்தைகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உமது காதுகளுக்கு எட்டவில்லையா?
இன்னும் எத்தனை ஐ.டி நிறுவங்களே, இத்தகைய சமூக சிந்தனைகளை ஊக்குவித்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
எத்தனை ஐ.டி ஊழியர்கள் கிராமங்களில் இருந்து படித்து வந்து இன்று இந்தியாவின் பொருளாதரத்தை மேம்படுத்த வழி வகை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
அவ்வளவு ஏன், இங்கே சமூக சிந்தனையுடனும், பல்சுவைகளுடனும் இணையத்திலே, தமிழை நிலை நாட்டி கொண்டிருபவர்கள் தமிழ் பயின்ற ஐ.டி ஊழியர்களே அதிகம் என்பது உமக்கு தெரியாத ஒன்றா?
இதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் போவதற்கு உங்கள் கண்களில் என்ன மஞ்சள் காமாலையா?
இங்கே எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருகின்றன. அதை பற்றி எழுதுங்கள். அதை விடுத்து ஐ.டியினால் கலாச்சார சீரழிவு என்பது போல் ஒரு மாயையை உருவாக்காதீர்கள்.
அது என்ன?
நாட்டில் விலைவாசி உயர்வா? ஐ.டி தான் காரணம்.
வீட்டு வாடகை அதிகமா? ஐ.டி தான் காரணம்.
ஆட்டோக்காரன் ஆட்டோ வாடகை அதிகமாக கேட்டால்? ஐ.டி தான் காரணம்.
அத்தோடு நிற்காமல், இன்னும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், கடந்த வாரம், சென்னையில் ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டான் என் நண்பன்.
சரி இதை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க செல்லில் பேசிக்கொண்டிருந்த போது, பிடித்து விட்டார்கள் ட்ராபிக் போலீஸ் புண்ணியவான்கள். (கவனிக்க: கார் ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டு விட்டது. கார் பத்து நிமிஷமாக நகரவில்லை). அவர்கள் இவனின் அனுமதி பெறாமல் வண்டியில் ஏறிக்கொண்டு "என்ன ஐ.டியா? எடு 1500 ரூபாய். பைன் கட்டு. இல்லை என்றால் எனக்கு 500 ரூபாய் கொடு. ஐ.டி தானே". இது எந்த வகையில் நியாயம்?
டிராபிக்கை ஒழுங்கு படுத்த வேண்டிய போலீஸ் காருக்குள் ஏறி லஞ்சம் கேட்பதை கேளுங்கள்.
நான் தெரியாமல் தான் இவர்களை பார்த்து கேட்கிறேன், நாட்டில் விலைவாசி உயர்ந்தால் யாரை கேட்கணும்? மளிகை கடைக்காரனிடம் கேளுங்கள் அல்லது நிதி அமைச்சரை கேளுங்கள். அதை விட்டுவிட்டு ஐ.டி என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?
வீட்டு வாடகையை உயர்த்தி கேட்கும் வீட்டுகாரர்களை கேளுங்கள். ஐ.டியை நோக்கி கை நீட்டுவது எந்த வகையில் நியாயம்?
சமூகத்தில் சீர்கேடு என்பது ஏதோ ஐ.டி வந்த பிறகு தான் நடப்பது போல் சித்தரிப்பது உச்சகட்ட கொடுமை. இதற்கு முன் இந்த நாட்டில் யாரும் குடிப்பது இல்லை என்பது போலவும், இப்பொழுதுதான் டாஸ்மாக் அதிகமாகிவிட்டது போலவும் கொக்கரித்து கொண்டு இருக்கிறார்கள்.
நாட்டில் விபச்சாரம் இன்னும் சில இத்யாதிகளையும் இப்போதுதான் இவர்கள் கேள்விபடுகிற மாதிரி எழுதுவதெல்லாம் ரொம்ப டூ மச் ரகம்.
உங்களுக்கு எல்லாம் அப்படி என்னதான் இந்த ஐ.டி மேல் அப்படி ஒரு காண்டு?!!!
Thursday, October 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
http://tvrk.blogspot.com/2008/10/blog-post_19.html
TVR
unmayayai chonnal I.T. Makkalin sampalam ivarhalin Kannai uruthuhirathu.
Avarhalal athai Geeranithukolla mudivathillai.
well said. Many people don't know how many IT people Toil more than 12 hours a day to achieve their status how much they read to keep them upto date with latest developments. I know many small poor families (from all caste) came out of poverty because their younger generation got job in IT.
வருகைக்கு நன்றி harijana
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி supersubra.
Long ago, before the birth of IT industry, the Bank employees passed through the same experience. For e.g the landlords jaked up the houserents for them exclusively. The general view of society was that they were paid more than others. However, they were not subject to the humiliation of getting assoicated with social vices as IT personnel are, now, as you hinted ehre.
Society is not to blame for forming such a negative view on you. Most IT personnel are young, living in a city like Bangalore or Chennai or Gurgaon or Noida etc. far away from their homes. Came straight to the job right from the colleges. Young and innocent aga, freedom on their hands, no parental supervision or fear, no accountability to anyone, sexual harmones secreting incessantly, these people seek fun and frolic.
If such seeking is moderate, and legitimate, no problem. When they transgress the decent limits, it becomes a licenstious life. In police raids, the clients found with expensive sex workers, in comprosmising position, are IT young men more often than not. The police let them off with a warning. A few months ago, the roof of first floor collapsed in a discothe at East Coast Road, Chennai, and the young man who died was an IT engineer, who was from Bihar. All the dancers were also from that industry.
Reports such as these color the minds of the society in a negative way. IT men and women lead a colorful life and will be termed to have had a colorful past, when their time to get married comes. The women are put to grief more than men. That is a pity!
As an individual, you may try to steer clear of such a life, by cultivating a regulated lfie strictly. Beyond that, you can do little to help your fraternity or sorority. The view of the socity is formed on circumstantial evidences, as explained above, and also, hearsay. The society is therefore mot to blame at all.
well said.. Mr.karikkulam..
சம்பள முரண்பாடு அதிகம் இருப்பதால், சிலர் பேசுவார்கள். அரசு மற்ற துறைகளுக்கு எப்படி IT ஐ கொண்டு செலவது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும். அதை விடுத்து மீடியா தெவையில்லாமல் மென்பொருள் ஊழியர்களை தாக்குவதற்கு முக்கியத்துவம் தருகிறது.
டிமாண்ட்/சப்ளை விதிப்படி கொடுக்க ஆள் இருப்பதால் வீட்டு வாடகையை முதலாளிகள் ஏற்றுவர். காரணம் வீட்டின் விலையேற்றமும் கூட. இதனால் வீடு கிடைக்காமல் பாதிக்கபடும் ஒரு மாதம் 4000 சம்பாதிப்பவன் திட்டுவது இயல்பே.இதையெல்லாம் போக்க ஒருங்கினைந்த வேலை பரவலாக்கல் திட்டம் தேவை.
நல்ல பதிவு. எல்லாருக்கும் பொறாமையும் இயலாமையும் தான் காரணம்.
ஐ டி போலவே பீ பி ஒ துறையும் இவர்களின் பொறாமைக்கு பலிகடா.
இளம் வயதில் இளைஞர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனரே என்ற பொறாமை, குறுகிய மனப்பான்மையே காரணம்.,
அந்த துறையில் உள்ளவர்கள் ஒரு நாளிக்கு எத்தனை மணி நேரம் உழைக்கிறார்கள், வாடிக்கையாலர்க்கு சேவை செய்ய வேண்டுமானால் விடுமுறை நாட்கள், இரவில் கூட உழைக்க வேண்டும், அவை எல்லாம் அறியாத 10 டு 5 வேலை சீஇபவர்கள் புலம்பல்.
ஒரு காலத்தில் அலுவலகங்களில் புதியவர்கள் மீது நடத்த பட்ட ராக்கிங், அரசியல் (office politics,) எல்லாம் IT, BPO (UK, USA BPOS)வந்த வுடன் மறைந்து இன்று எல்லாரும் ஒரு நண்பர்கள், சகோதர சகோதரிகள் போல பழ்குகின்றனர்.
வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ
Super da.
நன்றி karikkulam..
நன்றி Ŝ₤Ω..™
நன்றி வருங்கால முதல்வர்..
வாழ்த்துக்களுக்கு நன்றி குப்பன்_யாஹூ..
நன்றி krishna
அருமை அருமை! நம்ம துறை மானத்த காப்பதிடீங்க.நானும் ரொம்ப நாலா பார்த்துகிட்டு தான் இருக்கேன், இங்கிருக்கிற வலை பதிவாளர்கள் எல்லாரும் ஐ.டி துறைய வாரிகிட்டே தான் இருக்காங்க! சாமி இந்த வலை பதிவாளர்கள் யாராவது ஐ.டி துறைய வாருனா அவங்க காது, கண்ணுல இரத்தம் வரணும் !! இப்டியெல்லாம் என்ன வேண்டிக்க வைக்காதீங்க ஆமா !!
குப்பன்_யாஹூ க்கும் நன்றி
பாராட்டுகளுக்கு நன்றி Kay Kay
I am sorry boochaandi, you are really hurt. but, it is a true, proven fact that the sudden richness of the IT Professionals has resulted in many social problems like incredible hike of house rents, land values, price rise,etc. And it is also a proven fact how the IT people who are supposed to be one of the best educated people behave so crazy and shameful in the ECR corridor under the influence of alcohol.
The multinationals pay very high salaries (which is comparitively peanuts for them) to the IT Professionals and make them their slaves. It is true that the IT professionals work extremely hard to keep up their jobs which means they work more than 12 hours a day without any relaxation & lose their sleep, etc. Even this has lead to many socio medical problems in youngsters working in this field.
True, working hard & earning lots of money are soooooo good, BUT losing the social consciousness & health to earn money is neither good to the individual nor to the country.
நன்று. யானை தானே தும்பிக்கையால் தன் மீது மண்ணை வாரிக்கொள்ளும்.
1. இதில் பின்னூட்டம் போட்டவர்களில் எத்தனை பேர் தமிழில் போட்டிருக்கிறார்கள்?
2. கிராமத்து இளைஞர்கள் எத்தனை பேர் கிராமத்து அருமை புரிந்திருக்கிறார்கள்?
3. ஐ.ரி காரங்கள் என்ன சாதனை செய்திருக்கிறார்கள்? அமெரிக்கனுடையதை கொப்பி பண்ணி ஒட்டுறதை தவிர?
4. எத்தனை பேர் வெளி நாடுகளுக்கு ஓடுகிறார்கள்?
5. சமுகத்தில் மற்றவர்களுக்கு என்ன மரியாதை குடுக்கிறார்கள்?
6. உள் நாட்டு உற்பத்திக்கு என்ன முக்கியம் குடுக்கிறார்கள்?
7. உள் நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்?
8. இந்தியாவின் பொருளாதாரம் என்பதை விட ஏதாவது ஒரு பலன் உண்டா?
9. நீங்கள் வாங்கும் சம்பளம் தான் மக்களின் தலையில் விலையாக விழுகிறது. ஏன்?
10. உங்களது உழைப்புக்கு பெறுமதி உண்டா?
11. யாராவது என்ன செய்கிறான் என்று தெரிந்து செய்கிறார்களா?
12. கலாச்சாரம்?
13. மொழி?
இன்னும் பல. நானும் இதில பட்டு முழிக்கிறவன் தான். என்ன செய்யலாம்?
விமர்சனங்களை ஏற்று கொள்வதாக இருந்தால் ,
முதலில் உங்களுக்கு இந்த அளவிற்கு சம்பளம் கிடைக்க காரணம் என்ன?
திறமை என்று சொல்லாதீர்கள்,நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறைக்கு கிடைக்கும் மிக மிக அதிகமான லாபம்.அப்படி கிடைக்க காரணம் ,அரசாங்கத்தின் அபத்தமான கொள்கை
அதாவது உங்கள் மொழியில் சொன்னால் ,உங்கள் துறைக்கு கிடைத்த tax holidays.
திரும்ப திரும்ப அதை நீட்டிக்க வேண்டிய அவசியமென்ன?,அதிகமான ஆட்களுக்கு வேலை கொடுக்கும் உற்பத்தி துறைக்கு கிடைக்காத வரி சலுகைகள் ,இந்த துறைக்கு மட்டும் ஏன் ?
மற்ற துறைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிற்சாலைகளின் லாப சதவிகிதமும்,உங்கள் துறையில் லாப சதவீதமும் எந்த அளவில் இருக்கிறது என்று தெரியுமா?
உற்பத்தி துறைகளில் அதிகபட்ச லாப சதவீதமே இருபதுதான் என்பதை நீங்கள் அறிவீர்களா?
நீங்கள் படித்த அதே B.E ஆனால் வேறு துறைகளில் பனி புரிபவர்கள் ,திறமை சாலிகள் இல்லையா?அவர்களுக்கும் நீங்கள் வாங்குகிற சம்பளம் கிடைக்கிறதா?
இதை எல்லாம் தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கின்றன, உங்கள் கல்வி தகுதியை இருபது வருடங்களுக்கு முன்னரே அடைந்தும் ,இத்தனை வருட அனுபவத்திற்கு பிறகு கிடைக்கும் வருமானம் உங்களுக்கு ஆரம்பத்திலேயே கிடைக்கிறேதே ,அதன் பின் விளைவு என்ன?
இருபது வயதில் ,நம் சமூகத்தில் ஒருவனுக்கு பதினைந்து முதல் இருபது ஆயிரம் சம்பளம் கிடைத்ததென்றால் ,அவன் அந்த சம்பளத்தை என்ன செய்வான் என்று நினைக்கிறீர்கள்?
social imbalance என்பது நீங்கள் அறியாததா? ,ஒரு லட்சம் பெறாத இடத்திற்கு ஐந்து லட்சம் தருவது ,பத்து லட்சம் பெறாத வீட்டிற்கு இருபது லட்சம் தருவது
வீட்டு முன்பனமே ஒரு லட்சம் தருவது என்பதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்று பாருங்கள் ,
யாரோ ஒருவர் சொன்ன படி ,இதெல்லாம் பொருளாதார வளர்ச்சி அல்ல, வீக்கம்
அதன் பின் விளைவுகளை கூடிய விரைவில் நாம் எல்லோரும் அனுபவிப்போம்
தனிப்பட்ட முறையில் இந்த விமர்சனத்தை எடுத்து கொள்ளாதீர்கள்
பாபு & ஆட்காட்டி & selwilki
எனது வாதம் எல்லாம் எங்கோ, ஒருவர் செய்யும் தவறுகளால்,ஒட்டு மொத்த ஐ.டி துறையை சாடுவது சரிஇல்லை.. தவறு நடப்பதில்லை என்று சொல்லவில்லை.. யாரோ ஒருத்தர் செய்யும் தவறுக்காக அனைவரயும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரி இல்லை என்று சொல்கிறேன்.
மேலும் இங்கே கொடுக்கும் சம்பளம் சும்மா தந்து விடவில்லை. எங்களின் உழைபிர்காகதான் கொடுக்கிறார்கள்.
இதெல்லாம் பற்றி சொல்லிகொண்டிருந்தால் ஒரு பதிவு என்ன, ஆயிரம் பதிவு போட்டாலும் இன்னும் போட்டுக்கொண்டே இருக்கலாம்..
நீங்கள் திரும்ப திரும்ப உழைப்பு,திறமை என்று சொல்லாதீர்கள்
மற்றவர்களுக்கு எல்லாம் திறமை இல்லையா,உழைக்கவில்லையா,
உங்களுக்கு கிடைக்கும் அதீதமான சம்பளத்திற்கு காரணம் ,அரசாங்கத்தின் அபத்தமான கொள்கையே அன்றி வேறில்லை
1. இதில் பின்னூட்டம் போட்டவர்களில் எத்தனை பேர் தமிழில் போட்டிருக்கிறார்கள்? - நாங்க தினமும் உபயோகிக்கும் மொழிஇல் தட்டச்சு செய்வது எளிதானது என்பதால் அப்படி போட்டிருக்கலாம் .
2. கிராமத்து இளைஞர்கள் எத்தனை பேர் கிராமத்து அருமை புரிந்திருக்கிறார்கள்? - அதை எப்படி காட்ட வேண்டும் என்று நினைகிறீர்கள்?
3. ஐ.ரி காரங்கள் என்ன சாதனை செய்திருக்கிறார்கள்? அமெரிக்கனுடையதை கொப்பி பண்ணி ஒட்டுறதை தவிர? - முதலில் நீங்கள் என்ன சாதனை பண்ணி இருகிறீர்கள் என்பதை சொல்லுங்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த துறை ஐ. டி யை விட அதிகம் சாதித்தது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
4. எத்தனை பேர் வெளி நாடுகளுக்கு ஓடுகிறார்கள்? - வெளி நாட்டுக்கு செல்வது என்ன அப்படி ஒரு பாவமா? எங்கள் பிழைப்பு அப்படி.
5. சமுகத்தில் மற்றவர்களுக்கு என்ன மரியாதை குடுக்கிறார்கள்? - நீங்கள் அரசாங்க அலுவலகங்களுக்கு சென்று பாருங்கள். மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் இடத்தில் இந்த கேள்வியை கேளுங்கள்.
6. உள் நாட்டு உற்பத்திக்கு என்ன முக்கியம் குடுக்கிறார்கள்? - இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?
7. உள் நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்? மற்றவர்கள் செய்ததை விட அதிகமாகவே செய்துள்ளோம்
8. இந்தியாவின் பொருளாதாரம் என்பதை விட ஏதாவது ஒரு பலன் உண்டா? வேறு என்ன பலன் எதிர் பார்கிறீர்கள்
9. நீங்கள் வாங்கும் சம்பளம் தான் மக்களின் தலையில் விலையாக விழுகிறது. ஏன்? - எந்த கேள்வியை ஆடோகாரரிடமும் , வீட்டு உரிமையாளர்களிடமும் கேளுங்கள்.
௰. உங்களது உழைப்புக்கு பெறுமதி உண்டா? தாரளமாக
11. யாராவது என்ன செய்கிறான் என்று தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் ஒன்றும் செய்வதில்லை
12. கலாச்சாரம்? - எங்களுக்கு உள்ளூர் கலாச்சாரமும் தெரியும் உலக கலாச்சாரமும் தெரியும்.
13. மொழி? - அலுவல் காரணமாக ஆங்கிலத்தில் பேசினாலும் எங்கள் மொழியை நாங்கள் விட்டு கொடுப்பதில்லை.
//எனது வாதம் எல்லாம் எங்கோ, ஒருவர் செய்யும் தவறுகளால்,ஒட்டு மொத்த ______ துறையை சாடுவது சரிஇல்லை.. தவறு நடப்பதில்லை என்று சொல்லவில்லை.. யாரோ ஒருத்தர் செய்யும் தவறுக்காக அனைவரயும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரி இல்லை என்று சொல்கிறேன். //
இது அனைத்து துறைகளுக்கும் பொருத்தமான ஒன்று தான்
மருத்துவத்துறைக்கும் பொருந்தும்
காவல்துறைக்கும் பொருந்தும்
http://boochaandi.blogspot.com/2008/11/blog-post.html
தகவல் தொழில்நுட்ப துறையில் ஏன் இவளவு சம்பளம் தருகிறார்கள் என்றால் அங்கு தொழிலுக்கு முதலீடு என்பது தொநூறு விழுக்காடு மனித சக்தியியே சாரும் . மற்ற தொழில்களில் பார்த்தோமானால் மனித சக்தியின் முதலீடு என்பது முற்பதில் இருந்து நாற்பது சதவீதம் தான் இருக்கும் . ஏனெனில் மீத முதலீடு எந்திரம் மற்றும் அதனை பராமரித்தல் , நிலம் ஆகியவைக்கு செய்யப்படும் . அதனால் தான் மனித முதலீட்டுற்கு என்ன லாபமோ
அதை சம்பளமாக கொடுகிறார்கள் . இதை புரிந்து கொள்ள வேண்டும் .
அன்பன்.
யோகி
நல்ல செய்தி. நன்றி.
We are IT People doing மரம் வளர்த்தல்
Post a Comment